நெய்வேலி சுரங்க பங்கு விற்பனை-திருமா கண்டனம்
சென்னை:
என்எல்சி பங்கு விற்பனையை தடுக்காதது ஏன் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திருமாவளவன் கேள்விஎழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 6 முறை பெட்ரோல், டீசல்விலைகளை உயர்த்திய மத்திய அரசு தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் தேசிய அலுமினியக்கழகம் ஆகியவற்றின் பத்து சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
இடது சாரிகளின் கொள்கை உறுதிக்குச் சவால் விடும் வகையில் மத்திய அரசின் இந்த முடிவு அமைந்துள்ளது.குறைந்தபட்ச பொது திட்டத்துக்கு எதிராக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகலை விற்க முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு திமுக, பாமக ஆகிய கட்சிகளும் உடந்தையாக இருந்துள்ளன. மத்திய அரசின் இப்போக்கைஎதிர்த்து இடதுசாரிகள் என்ன செய்ய போகிறார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
நெய்வேலியில் உழைக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும் நிலங்களையும் பற்றி கொடுத்து இழப்பீடுகள்எதுவும் இது வரையில் பெற முடியாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
இந் நிலையில் மத்திய அரசு இத்தகைய முடிவெடுத்திருப்பது பொது மக்களை ஏய்க்கும் அப்பட்டமான மோசடிஆகும். உழைக்கும் மக்களுக்கு எதிராக இம் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இல்லையேல் இத்தகைய மக்கள் விரோத அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இடது சாரிகள் தனது உண்மையானநிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்திய அரசின் இம்முடிவை எதிர்த்து நெய்வேலி தொழிலாளர்கள் நடத்தவுள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்க்கு எமது இயக்கம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இம்முடிவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும்அனைத்துப் போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
