சுனாமி-50000 வீடுகள் கட்ட கருணாநிதி உத்தரவு
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து13 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனைநடத்தினார்.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது.கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், சுனாமி நிவாரணத்திற்கென ரூ. 2,347 கோடிநிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் ரூ. 731 கோடி மட்டுமேசெலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தையும் சுனாமி மறுசீரமைப்புப்பணிகளுக்காகவே செலவிட வேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வசதிகளையும் செய்து வர ஆட்சிததலைவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு கடல் பகுதியிலிருந்து 200 மீட்டருக்குஅப்பால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்தொடர்பான வரைவுத் திட்டத்தை ஜூலை 15ம் தேதிக்குள் அரசுக்கு ஆட்சித்தலைவர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
இத் திட்டத்தின் கீழ் 50,000 வீடுகளை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
கடுமையான பாதிப்புக்குள்ளான நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்டமாவட்டங்களில வீடு கட்டித் தரும் திட்டம் இன்னும் தொடக்க நிலையிலேயேஉள்ளன. இவற்றை விரைபடுத்த வேண்டும்.
2008ம் ஆண்டுக்குள வீடு கடடித் தரும் திட்டத்தை முடிக்க வேண்டும்.
மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வாரந்தோரும் ஒருங்கிணைப்புக்குழுக்களின் கூட்டத்தை கூட்டி ஆட்சியர்கள் விவாதிக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications