சிறுவன் நரபலி: சாமியார் உள்பட 4 பேர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 4 வயது சிறுவனை நரபலி கொடுத்தபோலிச் சாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ளது அரசடிக்குப்பம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்சக்திவேல். இவர் ஒரு விவசாயி. இவரது மகன் சதீஷ்குமார். இவரது பக்கத்து வீட்டில்வசிப்பவர் ராஜவேல். இவரும் விவசாயிதான்.ராஜவேலு புதிதாக ஒரு வீடு கட்டத் தொடங்கினார். ஆனால் வேலை பாதியில் நின்றுவிட்டது. மேலும் வீட்டு மனையில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது. இதனால் அவர்பயந்து போனார்.
மேலும், அவரது 5 மகன்களும் திருமண வயதை எட்டியிருந்தும் யாருக்கும்திருமணம் நடக்காமல் இழுத்துக் கொண்டு வந்தது.
இதனால் சோகமடைந்த ராஜவேலு, சேத்தியாத்தோப்பில் உள்ள கதிரேசன் சாமியாரைஅணுகி தனது பிரச்சினைகளைக் கூறியுள்ளார்.
அப்போது கதிரேசன், அங்கஹீனம் இல்லாத தலைச்சன் ஆண் குழந்தையைபலிகொடுத்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்று ராஜவேலுவிடம்ஆலோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சக்திவேலின் மூத்த மகன் சதீஷ்குமாரைபலி கொடுக்க ராஜவேலு முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்தசதீஷ்குமாரை, வாயைப் பொத்தி ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
பின்னர் அருகில் உள்ள முந்திரித் தோப்புக்குக் கொண்டு சென்றார். சாமியார்கதிரேசனுக்குத் தகவல் கொடுத்து அவரையும் அங்கு வரச் சொன்னார்.
அங்கு சதீஷ்குமாரை இந்தக் கொடூரக் கும்பல் நரபலி கொடுத்தது. சதீஷ்குமாரின்ரத்தத்தை ராஜவேலு புதிதாக கட்டி வரும் வீட்டுக்குக் கொண்டு வந்து வீடு பூராவும்தெளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் உடலை முந்திரித்தோப்புக்குள்ளேயே போட்டு விட்டனர்.
சிறுவன் ஒருவன் பிணமாகக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப்சிங் பேடிக்கும் புகார்மனுக்கள பறந்தன.
பண்ருட்டி டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணைநடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜவேலு, அவரது மனைவி வசந்தா, மகன்கிருஷ்ணராஜ், சாமியார் கதிரேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
வீடடுப் பிரச்சினை, திருமணப்பிரச்சினை தீர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கும்சம்பவம் கடலூர் மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications