5 லட்சம் கேட்டு குழந்தை கடத்தல்; சில மணி நேரங்களில் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

ரூ. 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களில் போலீஸார்பத்திரமாக மீட்டனர்.

விழுப்புரம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் கலைமோகன். இவரது மனைவிமணிமேகலை. இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் மேகா என்ற 3வயதுக் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள்.

எல்.கே.ஜி. படித்து வரும் மேகா, காலையில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தாள்.மதியத்துடன் அவளுக்கு வகுப்பு முடிந்து விடும். மணிமேகலையின் தங்கைகவிசித்ராதான் போய் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருவார்.

நேற்று முன்தினம் கவிசித்ரா மதியம் பள்ளிக்குப் போனபோது அங்கு குழந்தைமேகாவைக் காணவில்லை. இதனால் பல இடங்களிலும் மேகாவைத தேடிப்பார்த்தனர். அவள் கிடைக்காததால், விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டது.

போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையைத் தேடி வந்தனர். இந்த நிலையில்கலைமோகனின் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், ரூ. 5 லட்சம்பணம் தர வேண்டும். அப்போதுதான் குழந்தையைக் கொடுப்போம்.

இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறி விட்டு வைத்து விட்டார்.இதுகுறித்து கலைமோகன் போலீஸில் தெரிவித்தார். போலீஸார் தொலைபேசிஎண்ணை வைத்து குற்றவாளி இருக்கும் இடத்தை அறிந்தனர்.

கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை குறி வைத்து போலீஸ் படை விரைந்தது. இதைஅறிந்த கடத்தல்காரர்கள் பயந்து விட்டனர். இதையடுத்து நேற்று காலைகலைமோகனின் வீட்டு வாசலில் குழந்தையை விட்டு விட்டு கடத்தல்காரர்கள்தலைமறைவாகி விட்டனர்.

மேகா கதவைத் தட்டியபோது திறந்து பார்த்த மணிமேகலையும், கலைமோகனும்இன்ப அதிர்ச்சியில் மூழ்கி குழந்தையைக் கட்டிப் பிடித்து கதறி அழுதனர். பின்னர்சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செனறனர்.

அங்கு மேகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கலைமோகனின் உறவினர்ஒருவரது பெயரை சிறுமி கூறினாள்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியைப் பிடிக்க முயற்சிமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+