என்.எல்.சி: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்எல்சி நிறுவனத்தின் 10 சதவீத பங்ககுளை தனியாருக்கு விடும் முடிவை மத்தியஅரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெய்வேலி அணல் மின் நிலைய நிறுவனத்தின் 10 சதவீதப் பங்கினை தனியாருக்குவிட்டுத் தருவது தொடர்பாக எழுந்துள்ள எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைபுறக்கணித்து விட முடியாது. அலட்சியப் படுத்தக் கூடாது.

ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலிருந்து விலகிச்செல்வதற்கு எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டகொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப் பாட்டிலிருந்து தளர்வதாகவே கருதப்படும்.

எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகோரியுள்ளார் கருணாநிதி.

ஜெ. எதிர்ப்பு: நெய்வேலி அணல் மின் நிலைய பங்குகளில் 10 சதவீதத்தைத்தனியாருக்கு விற்கும் முடிவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய அலுமினியக் கழகம் மற்றும் என்எல்சி நிறுவனங்களில் 10 சதவீதம்பங்குகளைத் தனியாருக்கு விற்பது என மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகடுமையான கண்டனத்துக்குரியது.

இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின்ஆதாரத்தையே அழிப்பதாக அரசின் முடிவு அமையும்.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றுஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேசிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டணியில் திமுகவும் இடம் பெற்றுள்ளது. என்எல்சி பங்குகளை தனியாரிடம்வழங்கும் முடிவு பொதுச் செயல் திட்டத்துக்கு எதிரானதாகும்.

இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசுகைவிட வேண்டும். இதுபோல பங்குகளை விற்றால், பொதுத் துறை நிறுவனங்களில்தனியார் துறை நுழைய வழிவகுப்பதாக அமைந்துவிடும்.

பல லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+