நேரடிப் பேச்சு: பிரபாகரனுக்கு ராஜபக்ஷே அழைப்பு!
கொழும்பு:
இனப் பிரச்சினை தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராகஇருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு சிறபபுதூதர்கள் மூலம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கடிதம் அனுப்பியுள்ளதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை அமைதிப் பேச்சுக்கள் தேக்க நிலையில் உள்ளன. ஐரோப்பிய யூனியன்விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதால் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவிலிருந்து ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் விலக வேண்டும்.அப்புறம்தான் பேச்சு குறித்து யோசிக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் விலகிக் கொள்ளவேண்டும் என்றும் புலிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.
எங்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தினால் தற்கொலைப் படைத்தாக்குதல்களை தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குஅதிபர் ராஜபக்ஷே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று அதில்ராஜபக்ஷே கூறியுள்ளார். உதயன் நாளிதழ் ஆசிரியர் வித்யாதரன், வெளியீட்டாளர்சரவண பவன் ஆகியோரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து பிரபாகரனிடம்சேர்ப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அதன்படி இந்தக் கடிதம் பிரபாகரனிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ராஜபக்ஷேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில்சந்தித்த வித்யாதரன் மற்றும் சரவணபவனிடம் தனது திட்டத்தை விளக்கி இக்கடிதத்தைராஜபக்ஷே கொடுத்துள்ளார்.
அக்கடிதத்தில், கருணா குழுவினரின் செயல்பாடுகளை டக்கினால் பேச்சுவார்த்தைக்குசம்மதிப்பீர்களா என்றும் ராஜபக்ஷே கேட்டுள்ளார்.
மேலும், இப்போதைய நிலையில் போர் மூண்டால் இலங்கையின் பொருளாதாரம்கடுமையாக பாதிக்கப்படும். அப்படி நேர்ந்தால் இலங்கையில் உள்ள அனைத்துத்தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே நார்வேயின் உதவியை தொடர்ந்து எதிர்பாராமல், நேரடியாக இலங்கைஅரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன? என்று ராஜபக்ஷேகேட்டுள்ளார்.
இரு தரப்பும் நேரடியாகப் பேசி அதில் ஏற்படும் உடன்பாட்டை 2 வாரங்களுக்குஅமல்படுத்திப் பார்ப்போம். அதில் வெற்றி கிடைத்தால், அந்த உடன்பாட்டைதொடர்ந்து மேற்கொள்ளலாம்.
இந்த உடன்பாட்டுக் காலத்தின்போது கருணா குழுவினர் எந்தவிதமானதாக்குதலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும். அதற்கானபொறுப்பை நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜபக்ஷே.
ராஜபக்ஷேவின் கடிதத்தையும், அவர் கூறிய விவரங்களையும் வித்யாதரனும், சரவணபவனும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம்சேர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து பின்னர் பதில் அளிப்பதாக அவர்களிடம் தமிழ்ச்செல்வன் பதில் கூறிஅனுப்பியுள்ளார். ராஜபக்ஷேவின் அழைப்பை விடுதலைப் புலிகள் ஏற்பார்களாஎன்று தெரியவில்லை. இருப்பினும், போரை நிறுத்த இலங்கை அரசு மேற்கொள்ளும்ராஜதந்திரம் இது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் கருதப்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications