என்.எல்.சி. ஊழியர்கள் ஜூலை 4 முதல் ஸ்டிரைக்!
நெய்வேலி:
நெய்வேலி அணல் மின் நிலையம் (என்.எல்.சி.) மற்றும் தேசியஅலுமினியக் கழகம்ஆகியவற்றின் 10 சதவீத பங்குகளை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான மத்தியஅரசின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி ஜூலை 4மதேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய என்.எல்.சி. ஊழியர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மத்திய அரசின் முடிவுக்கு என்.எல்.சி. ஊழியர்களிடையே கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது. மேலும் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் என்.எல்.சி. விவகாரம் குறித்து விவாதிக்க கடலூரில் சிஐடியூஅமைப்பின் அலுவலகத்தில் என்.எல்.சி.நிறுவனத்தைச் சேர்ந்த பல்வேறுதொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மத்தியஅரசின் முடிவுக்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் கடும்எதிர்ப்புதெரிவித்தன. உடனடியாக இந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும்.
இதை வலியுறுத்தி ஜூலை 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான நோட்டீஸை என்.எல்.சி. நிறுவன நிர்வாகத்திடம் வருகிற 26ம் தேதிவழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
27ம் தேதி பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்துபணியாற்றவும் முடிவுசெய்யப்படடது. மேலும் ஜூன் 28ம் தேதி முதல் 2 நாட்களுக்குசுரங்க நுழைவாயில், நிறுவன நுழைவாயில், நிர்வாக இயக்குநரின் அலுவலகம் முன்புகண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தொழிற் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
ஜூலை 3ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப்படவுள்ளது. அன்று நள்ளிரவுக்கு மேல் ஊழியர்கள் யாரும் பணிக்குச்செல்லாமல் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்டபல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர பொறியாளர்கள் சங்கம், அலுவலர்கள் சங்கப் பிரநிதிகளும்இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications