ரூ.2 அரிசி: முறைப்படுத்த சிபிஎம் கோரிக்கை
பாண்டிச்சேரி:
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தென்றல் மணியைத் தாக்கியவழக்கில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஈரோடு போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திமுக அரசின் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி மக்களை முழுமையாகசென்றடையவில்லை. இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த அனைத்துக்கட்சி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.பாண்டிச்சேரிக்கு வந்த வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 2ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் வறுமைக் கோட்டிற்குக் கீழேஇருப்பர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக உள்ளது.
ஆனால் இத்திட்டம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். சிலஇடங்களுக்கு வரும் நல்ல அரிசியைக் கடத்தி விடுகிறார்கள். இதைத் தடுக்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை முறைப்படுத்த அனைத்துக் கட்சி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்.நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதை, மக்கள் மீது சுமையை ஏற்றும்லைசென்ஸாக அவர்கள் கருதக் கூடாது.
மதச்சார்பின்மையைக் காப்பதற்காகவும், மதவாத சக்திகள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காகவும்தான் மத்திய அரசை ஆதரித்து வருகிறோம்.
மத்திய அரசு தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால் ஒருமித்த கொள்கைஉடையவர்களை சேர்த்து 3வது அணி அமைப்போம். 3வது அணி அமைக்கும்எங்களது முயற்சிகளை சிலர் இரட்டை நிலை என்கிறார்கள்.
ஆனால் அது அப்படி அல்ல. தெலுங்கு தேசம் கட்சி, முலாயம் சிங் யாதவின் கட்சிஆகியவை எங்களது முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதை நாங்கள்வரவேற்கிறோம்.
எனவே 3வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இலங்கைத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆயுதத்தால்இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது.
அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வு கிடைக்க வழி வகுக்கும். தமிழ்மக்களுக்கு அரசியல் அங்கீகாரம், அதிகாரம் கிடைக்க இந்திய அரசும் ஜனநாயகரீதியில இலங்கைப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றார் வரதராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications