கள்ள நோட்டு ஜனனி-மாட்டுவாரா அந்த விஐபி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜனனி விவகாரத்தில் அந்த விஐபியின் நடவடிக்கைகளை உளவுப் பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

சிதம்பரம் சுவாமி பெயர் கொண்ட அந்த விஐபிக்கு மிக வேண்டியரான ஜனனி கஞ்சாவில் ஆரம்பித்து இப்போதுகள்ள நோட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

ஜனனிக்கு உதவ அந்த விஐபி தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் மதுரையில்ரகசியமாய் முகாமிட்ட அவர் வழக்கறிஞர்களுடன் இந்த வழக்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையடுத்து அவரது நடவடிக்கைகளை உளவுப் பிரிவினர் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வழக்கில்உரிய ஆதாரங்கள் சிக்கினால் அவரையும் வளைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கள்ள நோட்டு விஷயத்தில் அவரிடமும் விசாரணை நடத்தினால் அது முக்கிய கட்சிக்கு பெரும் சிக்கலாகஅமையும் என ஆளும் தரப்பு கருதுகிறது.

இந் நிலையில் விஐபிக்கு வேண்டிய ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜா (பணம் இவருடையது என ஜனனி கூறியிருந்தார்),அவருக்கு பணம் தந்த டெல்லி ஆடிட்டர் ரவி சோப்ரா, அவரது நண்பர் அதுல் திவாரி ஆகியோரிடமும் கள்ளநோட்டுக்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.

இதற்கிடையே இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சில முக்கிய தலைகளும்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த விஐபிக்கு உத்தரப் பிரதேச அரசியலின் விவிஐபிக்களிடம் ரொம்பவேநெருக்கம் உண்டு. அடிக்கடி அங்கு போய் வருவார். அவர்களது பணத்தை தென் மாநிலங்களில் முதலீடு செய்துதந்து பாதுகாப்பது அவரது முக்கிய வேலைகளில் ஒன்று.

இதனால் உ.பி அரசியல் புள்ளிகள் மத்தியில் அந்த விஐபிக்கு பெரும் மதிப்பு உண்டு. இந் நிலையில் ரிசர்வ் வங்கிஅச்சடிக்க இருந்த சீரியல் நம்பரிலேயே முன் கூட்டியே பணம் அடித்துள்ளது கள்ள நோட்டுக் கும்பல். அந்தப்பணம் தான் ஜனனி வசம் வந்துள்ளது.

ஜனனிக்கும் கள்ள நோட்டுக் கும்பலுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு என போலீசார்கருதுகின்றனர். அது வேறு வழியில் தான் ஜனனிக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்தவிவகாரம் சிபிஐக்குப் போக நிறையவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அப்போது தமிழகத்தின் அந்த விஐபியில் ஆரம்பித்து உபி வரை சில முக்கிய தலைகள் இதில் உருளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+