மாயாவதி எனக்கு கள்ள நோட்டு கொடுத்தாரா?: ஜெ. ஆவேசம்
சென்னை:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு சென்னை அருகே மகாபலிபுரத்தில்ரகசியமாக சிகிச்சை மேற்கொள்ள தான் உதவியதாகவும், அதற்கு உபகாரமாக அவர்ரூ. 50 கோடி பணம் கொடுத்ததாகவும், அதில் சில கோடி ரூபாய் கள்ள நோட்டுஎனவும் அந்த கள்ள நோட்டுக்களை அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரண நிதியுடன்கலந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இதுதொடரபாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,25.6.2006 அன்று வெளியான நக்கீரன் இதழில் கள்ள நோட்டுக் கணக்கு என்றதலைப்பில் மிகப் பொய்யான செய்தி வெளியாகியுள்ளது. இந்த இதழில் தொடர்ந்துவெளி வரும இவ்வாறான பொய்த் தகவல்களுக்கும், உண்மைக்குப் புறம்பானகற்பனைக் கட்டுரைகளுக்கும் நநிான் என்றைக்கும் முக்கியத்துவமோ, மதிப்போஎப்போதும் தந்தது இல்லை.
வீரப்பனின் நெருங்கிய நண்பனாக இருந்து மிகப் பெரிய பலன்கள் அடைந்தநபர்களிடமிருந்து என்ன ஒரு தரத்தை எதிர்பார்க்க இயலும். மேற்படி பத்திரிக்கையில்என்னைப் பற்றியும், முன்னாள் உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயாவதியைப் பற்றியும் தவறான முறையில் ஒரு செய்திவெளியாகியுள்ளது.
மாயாவதி சென்னைக்கு வந்ததாகவும், மகாபலிபுரத்தில் தங்கி சிகிச்சை பெற்றதாகவும்,அதற்கான ஏற்பாடுகளை நான் செய்ததாகவும், அதற்காக அவர் எனக்கு ரூ. 50 கோடிபணம் அனுப்பினார் என்றும், அவை கள்ள நோட்டுக்கள் என்றும் ஏதேதோஎழுதியுள்ளனர்.
அதுவும் இல்லாமல், வெள்ள நிவாரணமாக எனது அரசால் கொடுக்கப்பட்டநிவாரணத தொகையில் மேற்படி கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டதுஎன்றும், கேவலமான கற்பனையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு மேற்படிபத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மாயாவதிக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் என் ஏற்பாட்டில் நடக்கவில்லை.அதற்காக அவர் 50 கோடி ரூபாய் பணத்தை எனக்குத் தர வேண்டிய அவசியம்இல்லை. வராத நபர் பெறாத ஒரு சிகிச்சைக்காக 50 கோடி ரூபாய் அதுவும் கள்ளநோட்டுக்களாக ஏன் தர வேண்டும் என்று புரியவில்லை.
எதிர்கட்சியாக அரசியல் வாழ்வில் உள்ளோர் இவ்வாறு கீழ்த்தரமான, கற்பனைக்கும்எட்டாத இவ்வகை அவதூறுகளையும் சகித்துக் கொளள வேண்டும் என்ற அளவுக்குதமிழக அரசியல் தரம் தாழ்ந்து விட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
வெள்ள நிவாரணப் பணியில் மக்கள் மத்தியில் இன்றளவும் எனக்கு உள்ளநற்பெயரை சகித்துக் கொளள முடியாத எனது அரசியல் எதிரிகளின் கைக்கூலியாகத்தான் நக்கீரன் இவ்வாறு அவதூறு செய்தி வெளியிட்டுளளது.
எதற்கும் திருந்தாத நக்கீரனை மக்கள்தான் திருத்த வேண்டும். இந்த செய்தி குறித்துஉடனடி சட்டரீதியான தீர்வையும் காண உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications