இட ஒதுக்கீடு: பிற்பட்டவர்களின் உரிமை-ராமதாஸ்
பாட்னா:
அனைத்துக் கல்விக் கூடங்களிலும் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ள ராமதாஸ், பல்வேறு கட்சித்தலைவர்கள், முதல்வர்களை சந்தித்து வருகிறார்.இதன்படி பிகார் வந்த ராமதாஸ், பல கட்சியினரையும் சந்தித்தார். பின்னர் பாட்னாவில் நிருபர்களிடம் பேசியஅவர்,
நாட்டில் 60 சதவீததுக்கும் மேலானவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தான். ஆனால், கடந்த 58 வருடமாக இந்தமக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. கல்வி பெறுவதில் அவர்களுக்கு உரிமை தரப்படவில்லை.
இதனால் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும். இதை அடுத்தகல்வியாண்டு முதலே மத்திய அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.
அரசியல் சட்டத்தில் வழிவகை இருந்தும் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிமை கிடைக்காமல் செய்யஇத்தனை காலம் சதி நடந்துவிட்டது. 51 வருடத்துக்கு முன்பே பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்என காகா கலேகர் கமிஷன் பரிந்துரை செய்தது.
ஆனால், அதைச் செய்யவில்லை. அந்த இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் இன்று பிற்பட்ட சமூக மக்கள் பெரும்சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சியை எட்டியிருப்பார்கள். அதே போல மண்டல் கமிஷன் பரிந்துரைகளையும்26 ஆண்டுகள் ஆறப் போட்டு பிறப்பட்டவர்களை ஒடுக்க சதி நடந்தது.
விபி சிங் பிரதமரான பின்னரே ஒரு வழியாக விடிவு கிடைத்தது. கல்வியிலும் இட ஒதுக்கீடு என்பதுபிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications