நியூயார்க்கில் தமிழர் திருவிழா!
நியூயார்க்:
நியூயார்க்கில் ஜூலை 1ம் தேதி தொடங்கும் 3 நாள் வருடாந்திர தமிழர் திருவிழாவைமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வட அமெரிக்ககண்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா அல்லது கனடாவில் கூடிதமிழர் திருவிழா என்ற பெயரில் விழா கொண்டாடி வருகிறார்கள்.வட அமெரிக்க தமிழர் சம்மேளனம் என்ற அமைப்பு இந்த விழாவை ஆண்டுதோறும்கொண்டாடி வருகிறது.
இவ்விழாவுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்தச் செய்தி அனுப்புவார் என்று தெரிகிறது.இருப்பினும் தமிழக அமைச்சர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்தத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநாட்டு குழுத் தலைவர் நடராஜன் ரத்தினம் கூறுகையில், நடிகர்சரத்குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ராதிகா,
கவிஞர்கள் வைரமுத்து, அறிவொளி, ஒற்றைக்காலுடன் நடனமாடி சாதனைபடைக்கும் நடனக்கலைஞர் குட்டி, பாடகி வாணி ஜெயராம், பேச்சாளர்கள் இலந்தைராமசாமி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர நாட்டியப் பேரொளி நடிகை பத்மினியையும் விழாவுக்குஅழைத்துள்ளோம். ஜூலை 2ம் தேதி தமிழ் சிறு தொழிலதிபர்களுக்கான கருத்தரங்கம்நடைபெறுகிறது.
பிரபல மன்ஹாட்டன் அரங்கில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது என்றார் நடராஜன்.
வட அமெரிக்க தமிழர் சம்மேளனம் கடந்த 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆரம்பத்தில் மொத்தம் 4 தமிழ்ச் சங்கங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தற்போது 40சங்கங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. அரசியல் சார்பற்ற மொழி மற்றும்கலாச்சார மேம்பாட்டுக்கான அமைப்பு இது.
இந்த அமைப்பின் தீவிர முயற்சி காரணமாக, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்தமிழ் கற்பிக்கும் பிரிவு துறை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுஅசலான தமிழக உணவு வகைகள் இந்த விழாவில் பரிமாறப்பட உள்ளன.இளைஞர்களுக்கான கருத்தரங்கம், பேச்சரங்கம், மருத்துவக் கல்வி தொடர்பானகூட்டம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய மாநாடாக இந்த தமிழர் திருவிழாநடைபெறவுள்ளதாக அமைப்பின் செயற்குழு உறுப்பினரும் பத்திரிக்கையாளருமானபிரகாஷ் எம்.சுவாமி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications