அதிரடிப்படை கற்பழிப்புகள்-முத்துலட்சுமி உருக்கம்
சென்னை:
அதிரடிப்படையினரால் சித்தவதை, கற்பழிப்பு என பலவித கொடுமைகளை சந்தித்த பழங்குடி மக்களுக்கு ஒருநிவாரணமும் கடைக்கவில்லை என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார்.
சித்திரவதை கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி சென்னை எத்திராஜ் கல்லூரியின் மனித உரிமைத் துறையின் சார்பில் நடந்த கலந்துரையாடலில்முத்துலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.அவர் கூறியதாவது:
என் கணவர் தவறு செய்தார், அவருக்கு தண்டனை தந்தீர்கள். ஆனால், எந்தத் தவறும் செய்யாத நாங்கள் ஏன்பாதிக்கப்பட வேண்டும். காடுகளில் வாழும் அப்பாவி பழங்குடியினர் என்ன தவறு செய்தார்கள்.
அவர்களை சித்தவதை, கற்பழிப்பு என அதிரடிப்படையினர் படாதபாடு படுத்திவிட்டார்கள். என் மீதும்தொடர்ந்து வழக்குகள் போட்டார்கள். வீரப்பனின் அண்ணன் 18 வருடமாய் சிறையில் இருக்கிறார். வீரப்பனின்தம்பியை கர்நாடக அதிரடிப்படை விஷம் வைத்து கொன்றுவிட்டது.
வீரப்பனின் அண்ணன் மகன் ஒரு வக்கீல். அவரையும் விபத்து என்ற பெயரில் சென்னையில் ரோட்டில் வைத்துகொன்றுவிட்டார்கள்.
என் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூட அனுமதி மறுத்தார்கள். பெண்களை கற்பழித்த போலீசாருக்குபதவி உயர்வு, வீட்டு மனை, பரிசு கொடுத்தார்கள். ஆனால், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும்,கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கும் இன்னும் ஒரு நிவாரணமும் வந்து சேரவில்லை என்றார் முத்துலட்சுமி.
தனது பேச்சின்போது அவ்வப்போது கண் கலங்கினார் முத்துலட்சுமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications