பெண் வினியோகஸ்தரை ஏமாற்றிய விஜயகாந்த் அண்ட் மச்சான்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

நரசிம்மா படத்தை திரையிட்டதால் ஏற்பட்ட ரூ. 26 லட்சம் நஷ்டத்தை நடிகர்விஜயகாந்த் திரும்பத் தரக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பெண்வினியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜயகாந்த் நடித்து வெளியான படம் நரசிம்மா. இப்படத்தை நெல்லை மாவட்டத்தில்திரையிடும் வினியோக உரிமையைப் பெற்றவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தமாரியம்மாள். இவர் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குதொடர்ந்துள்ளார்.

அதில், செல்வ நந்தினி பிக்சர்ஸ் உரிமையாளரான நான், நரசிம்மா படத்தை நெல்லைமாவட்டத்தில் வெளியிடும் உரிமையைக் கோரியிருந்தேன்.

அதற்கு ரூ. 55 லட்சம் பணம் தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் சுதீஷும்(விஜயகாந்த்தின் மச்சான்), நடிகர் விஜயகாந்த் ஆகியோர் கேட்டனர்.

இதையடுத்து திரையரங்க உரிமையாளர்களிடம் பணத்தை வசூல் செய்துஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எனது கணவர் வீட்டில் வைத்து சுதீஷிடம் பணத்தைதக்கொடுத்தேன்.

அவர்கள் 10 பிரதிகள் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர்.

படத்தின் வசூல் 55 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்குரிய நஷ்டத்தைதிரும்பச் செலுத்துவதாகவும், அடுத்து வரும் படத்தின் வினியோக உரிமையில் ஈடுசெய்வதாகவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந் நிலையில் படம் வெளியானது. வசூல் மிகவும் மோசமாக இருந்தது. ரூ. 29லட்சம் மட்டுமே கலெக்ஷன் ஆனது. இதனால் எனக்கு ரூ. 26 லட்சம் அளவுக்குநஷ்டம் ஏற்பட்டது. இதை ஈடு செய்ய வேண்டும் என்று கடந்த 2003ம் ஆண்டு எனதுவழக்கறிஞர் மூலம் சுதீஷுக்கு நோட்டீஸ் அனுப்பினேன்.

பின்னர் சுதீஷ் மற்றும் விஜயகாந்த்தை நேரிலும் சந்தித்து, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி பணத்தைக் கொடுக்குமாறு நானும், எனது கணவரும் கோரினோம்.

பணத்தைக் கொடுப்பதாக கூறினர். ஆனால் காலம் தாழ்த்தி வந்தனர்.

பின்னர் மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு தந்தி மூலம் வக்கீல் நோட்டீஸ்அனுப்பினோம். அதிலும் பலன் கிடைக்கவில்லை. எனவே விஜயகாந்த் மற்றும் சுதீஷ்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் மாரியம்மாள்.

மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன், விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் ஜூலை28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+