3வது அணி: திமுகவுக்கு பொறாமை என்கிறார் ஜெ
சென்னை:
தேசிய அளவில் அமைக்கப்படவுள்ள 3வது அணியில் நான் சேரவிருப்பதுகருணாநிதிக்கு ஏன் பொறாமையைக் கொடுத்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய அளவில் 3வது அணி அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டுஆண்டுகளாகவே ஆந்திர மாநில முன்னாள் தல்வர் சந்திரபாபு நாயுடு, உ.பி. மாநிலமுதல்வர் லாயம் சிங் யாதவ், அவரது சார்பில் அவரது கட்சித் தலைவர் அமர்சிங்ஆகியோர் என்னுடன் பேசி வருகிறார்கள்.
என்னுடன் தேசியத் தலைவர்கள் பேசி வருவது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை.இதனால்தான் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 3வது அணியில்ஜெயலலிதாவை சேர்க்க சிபிஎம் மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.
3வது அணி குறித்து நான் கூறும்போது, என்னுடன் சிபிஎம் தலைவர்கள் பேசினார்களஎன்று கூறவே இல்லை. சில தலைவர்கள் பேசி வருகிறார்கள் என்றுதான்கூறியிருந்தேன்.
3வது அணியில் நான் இடம் பெறுவதால் கருணாநிதிக்கு ஏன் இத்தனை கவலை?தேசியத் தலைவர்கள் என்னுடன் பேசி வருவது அவருக்கு புகைச்சலைஏற்படுத்தியுள்ளது. பொறாமை உணர்வால்தான் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
இந்தியாவில் எத்தனை கூட்டணிகள் உருவானாலும், அத்தனை கூட்டணியிலும்சந்தர்ப்பத்திற்கேற்ப இடம் பெற்று, பதவிகளைப் பிடித்து பதவி சுகம் அனுபவிப்பதேகருணாநிதியின் ஒரே வாழ்க்கை லட்சியம்.
முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று வாஜ்பாய் அமைச்சரவையில்பல முக்கியப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு பதவி சுகம் அனுபவித்தார். இப்போதுகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் பங்கு பெற்று,பல முக்கியப் பதவிகளை வற்புறுத்திப் பெற்று ஆதாயம் அனுபவித்து வருகிறார்.
இப்போது 3வது அணி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அந்தஅணியிலும் இடம் பிடிக்க இப்போதே ஆயத்தமாகி விட்டார். அதற்கு என்னால்இடைஞ்சல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், சிபிம் அனுமதிக்கவில்லை என்றுஆத்திரத்தோடு கூறியிருக்கிறார்.
பதவி சுகத்திற்காக ஓரிடத்தில் இருப்பதும், பின்னர் அடுத்த இடத்தை நோக்கிபறப்பதும் அவருக்கு வழக்கம். இப்படிக் கிடைத்த பதவிகள் மூலம் சேர்த்த சொத்தைவெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்தும், முதலீடு செய்தும் வந்த முரசொலிமாறன், உடல் நிலை சரியில்லை என்ற போதிலும், 2 ஆண்டுகள் மூளை இயங்காதகோமா நிலையில் அமைச்சர் பதவியில் அவரை வைத்திருந்தார் வாஜ்பாய்.
அப்படிப்பட்ட வாஜ்பாய்க்கு கருணாநிதி காட்டிய நன்றி என்ன?
உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த முரசொலி மாறனை, வெளிநாட்டுக்குஅழைத்துச் சென்று அங்கு கணக்குகளை சரி செய்து விட்டு பின்னர் இறந்து விட்டதாகஅறிவித்து, அவரது இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாஜ்பாய் டெல்லிதிரும்புவதற்குள்ளாகவே, காங்கிரஸோடு கூட்டணி வைத்தார் கருணாநிதி.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற கருணாநிதி அங்கு சோனியா காந்தியை சந்தித்தபின்னர் மறுநாளே சுர்ஜித் சிங்கை சந்தித்து 3வது அணியில் நானும் சேரத் தயார் என்றுமனு கொடுத்து விட்டு வந்துள்ளார்.
இதுதான் லட்சியம் பேசும் கருணாநிதியின் லட்சணம். இதை மக்கள் உணர வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications