கேட்ஸ்-வாரன் உருவாக்கிய உலகின் மிகப் பெரிய அறக்கட்டளை!
நியூயார்க்:
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாபில்கேட்ஸ் திடத்தி வரும் அறக்கட்டளைக்கு, இரண்டாவது பெரிய கோடீஸ்வரரானவாரன் பஃபெட் தனக்குச் சொந்தமான 30.7 பில்லியன் டாலரை நன்கொடையாகவழங்கியுள்ளார்.
இதன் மூலம் உலகிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக பில்கேட்ஸ்-மெலிண்டாபெளண்டேசன் உருவாகியுள்ளது. உலக வரலாற்றிலேயே இவ்வளவு பெரியஅறக்கட்டளை இதுவரை அமைந்தது இல்லை.
![]() |
| பில்கேட்சுடன், மெலிண்டா, வாரன் |
பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் இணைந்து நடத்தும் இந்தஅறக்கட்டளை எய்ட்ஸ் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி ஆகியவற்றுக்காக பாடுபட்டுவருகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் பில்கேட்ஸ் அறக்கட்டளை நிதியுதவி வருகிறது.
தற்போது பில்கேட்ஸ் தம்பதியின் சேவையில் நம்பர் டூ பணக்காரரான வாரன் பஃபட்கை கோர்த்துள்ளார். தனது மொத்த சொத்தான 44 பில்லியன் டாலரில் கிட்டத்தட்ட 80சதவீதத்தை பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.
இதன் மூலம் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் நிதி இருப்பு 60 பில்லியன் டாலராகஉயர்ந்துள்ளது.
வாரன் பஃபெட் பெர்கஷைர் ஹாத்வே என் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். இதுதவிர முதலீட்டு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.பெரும்பாலும் பங்குச் சந்தையில் தான் வாரன் தனது சொத்தை சம்பாதித்தார்.
தனது நன்கொடை குறித்து வாரன் கூறுகையில், மிகப் பெரும் சொத்துக்கு அதிபதிஎன்பதில் எனக்கு விருப்பம் இல்லை. உலகில் 6 கோடிக்கும் மேற்பட்டோர்ஏழ்மையின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கம்போது நாம் மட்டும் பணக்காரராகஇருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
வாரன் நன்கொடை தருவதற்கான ஒப்பந்தம் நியூயார்க் பொது நூலகத்தின் தலைமைக்கிளையில் நடந்தது. இதில் பில்கேட்ஸ், மெலிண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிநகழ்ச்சியில் பில்கேட்ஸ் பேசுகையில், 2008ம் ஆண்டு ஜூலை முதல்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளிலிருந்து விடுபட முடிவுசெய்துள்ளேன். பின்னர் என் முழு நேரத்தையும் அறக்கட்டளை பணிகளுக்கேசெலவிடுவேன் என்றார்.
கேட்ஸ் அறக்கட்டளைக்கு வாரன் கொடுத்துள்ள நன்கொடை விவரம்:
பெர்க்ஷைர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 10 மில்லியன் பங்குகள். அவரது மறைந்தமனைவி சூசன் பெயரில் உள்ள 2.05 மில்லியன் பங்குகள். மற்றும் தனது மூன்றுகுழந்தைகளான சூசி, ஹோவர்ட், பீட்டர் ஆகியோர் பெயர்களில் உள்ள பங்குகள்.
வாரன் கொடுத்துள்ள பங்குகளின் மொத்த மதிப்பு 30.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.இதுவரை அமெரிக்காவில் தனிநபர் ஒருவர் கொடுத்த அதிகபட்ச நன்கொடைஇதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவன தலைமைப் பொறுப்பிலிருந்து இன்னும் நான்கு மாதங்களில் வாரன்விலகவுள்ளார்.
கேட்ஸ் அறக்கட்டளைக்கு வாரன் கொடுத்துள்ள பங்குகள் படிப்படியாக கேட்ஸ்அறக்கட்டளைக்கு மாற்றப்படும். ஆண்டுக்கு 3 பில்லியன் என்ற அளவில் இந்தப்பணம் கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளைக்கு வரும்.
கொடுப்படும் பணம் முழுவதையும் அந்த ஆண்டுக்குள்ளேயே செலவழித்து விடவேண்டும் என்று ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளார் வாரன்.













Click it and Unblock the Notifications