புரட்சி தலைவி அம்மா இலவச மண்டபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி, ஜெயலலிதா பெயரில் இலவசதிருமண மண்டபத்தைக் கட்டியுள்ளார். இந்தத் திருமண மண்டபத்தில் அதிமுகவினர்மற்றும் பொதுமக்கள் இலவசமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஜெயலலிதா நாளை திறந்துவைக்கிறார்.

இந் நிலையில் இந்த திருமண மண்டபம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதால்சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று துணை மேயர் கராத்தேதியாகராஜன் கூறியுள்ளார்.

அதிமுகவினரிலேயே மிகவும் வித்தியாசமானவர் சைதை துரைசாமி. முன்னாள்எம்.எல்.ஏ.வான துரைசாமிக்கு சைதாப்பேட்டை தொகுதியில் மிக நல்ல செல்வாக்குஉண்டு.

ஆனாலும், இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைத்துவிடாமல் மன்னார்குடிகோஷ்டி ஒடுக்கி வைத்துள்ளது. இருப்பினும் அதிமுகவுக்காக தீவிரமாகவழக்கம்போல் உழைத்து வருகிறார்.

அங்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர் துரைசாமி. அத்தோடு கட்சிபாகுபாடின்றி பலருக்கும் உதவுபவர். சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள குடிசைப்பகுதி மக்களின் குழந்தைகளுக்காக மாலை நேரப் பள்ளிகளைத் தொடங்கி கல்விச்சேவை ஆற்றியவர்.

இப்போது அவரும், அவரது மனைவி மல்லிகா, மகன் வெற்றி துரைசாமிஆகியோரைக் கொண்ட மனித நேய அறக்கட்டளை என்ற அமைப்பை துரைசாமிநிறுவியுள்ளார்.

இந்த அமைப்பின் சார்பில் சென்னை வேளச்சேரியில் 18,000 சதுர அடியில் திருமணமண்டபம் ஒன்றை கட்டியுள்ளார். இதற்கு புரட்சித் தலைவி அம்மா இலவச திருமணமண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளார். அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் இந்தகல்யாண மண்டபத்தை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இலவசம் என்பதால் சாதாரண மண்டபமாக இதை துரைசாமி கட்டவில்லை. அதி நவீனவசதிகளுடன் கூடிய அழகிய மண்டபமாக இது உருவாகியுள்ளது.

ஒரே நேரத்தில் 250 பேர் சாப்பிடக் கூடிய வகையிலான உணவருந்தும் ஹால், 500பேர் வரை அமரக் கூடிய வகையிலான திருமண ஹால் என அருமையாகவடிவமைத்துள்ளார் துரைசாமி.

திருமண நிகழ்ச்சிகள் தவிர, காது குத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெயர் சூட்டும்விழா, வளைகாப்பு, திருமண வரவேற்பு என அனைத்து சுப காரியங்களும்இலவசமாக அனுமதிக்கப்படும்.

மின்சாரக் கட்டணம், மண்டபத்தை சுத்தப்படுத்துவதற்கான செலவுகளை மட்டுமேநிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று துரைசாமிதெரிவித்துள்ளார்.

திருமண மண்டபத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை திறந்துவைக்கிறார். மேலும் 5 திருமணங்களையும் நடத்தி வைக்கிறார்.

அம்மா மண்டபத்துக்கு ஆபத்து:

இந் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி துணை மேயர்கராத்தே தியாகராஜன்,

குடிசைத் தொழில் செய்வதாக கூறித்தான் அந்த இடத்தில் கட்டடம் கட்ட துரைசாமிஅறக்கட்டளை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கியது. அதன்படி கீழ்த்தளத்தில்வணிக வளாகம் அமைக்கவும், மேல்தளத்தில் குடியிருப்புகள் கட்டவும் அனுமதிவழங்கப்பட்டது.

ஆனால் இப்போது அங்கு கல்யாண மண்டபத்தைக் கட்டியுள்ளனர். மேலும் 5,000சதுர அடிக்குத்தான் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதை மீறி 18,000 சதுரஅடி அளவுக்கு கட்டடத்தை கட்டியுள்ளனர். இது அப்பட்டனமான, சட்டவிரோதமானவிதிமீறலாகும். இதில் மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிட சைதை துரைசாமி தீவிரமாக முயன்றுவருவது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்து அம்மா மண்டபத்தை கட்டி அசத்திப்புட்டாரு அண்ணேஎன்கிறார்கள் அவரது அடிப்பொடிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+