மாயமான ஆசிரியை மீனாட்சியின் எலும்புக்கூடு சிக்கியது: கொன்றது யார்?!
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டஎலும்புக்கூட்டின் மீது இருந்த சேலை, கடந்த 2004ம் ஆண்டு காணாமல் போனஆசிரியை மீனாட்சியுடையதுதான் என்று அவரது உறவினர்களும், உடன் வேலைபார்க்கும் ஆசிரியைகளும் அடையாளம் காட்டியுள்ளனர். இதனால் இறந்தது மீனாட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது.
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி (வயது 35) பணிக்கம்பட்டி என்றஇடத்தில் உள்ள திரு.வி.க. உயர் நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். கடந்த2004ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அவர் காணாமல் போய் விட்டார்.
![]() |
| கணவர் ஜோதிராமலிங்கத்துடன் மீனாட்சி |
ஸ்கூலில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்ட அவரை சிலர் வேனில் கடத்திச்சென்றதாக மட்டும் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக குளித்தலை போலீஸார் தான் முதலில் விசாரித்து வந்தனர். ஆனால்இந்த சம்பவத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திற்குத் தொடர்புஇருப்பதால் போலீஸ் விசாரணை பாரபட்சமாக உள்ளதாக மீனாட்சியின் கணவர் சேதுராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில்மீனாட்சி குறித்த எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
திரும்பத் திரும்ப வாய்தா கேட்டு வந்ததால் அதிருப்தி அடைந்த மதுரைஉயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் எனசிபிசிஐடியை எச்சரித்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், பாப்பா சுந்தரம், அவரது மகன்கருணாகரன், மைத்துனர் ரங்கநாதன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியது.அவர்களிடம் பெங்களூரில் வைத்து உண்மை கண்டறியும் சோதனையும் (நார்கோஅனாலிஸிஸ்) நடத்தப்பட்டது. ஆனால் விசாரணையில் எந்தவிதத் துப்பும்கிடைக்கவில்லை.
இந் நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்து இடைக்காலத் தடை வாங்கியது. இதனால் சிபிசிஐடி போலீசாரே தொடர்ந்துவிசாரித்து வந்தனர்.
![]() |
| மீனாட்சியின் எலும்புக் கூடு கிடைத்த வாழைத்தோப்பு. எலும்புக் கூடு மீதிருந்த பச்சை நிற சேலை |
வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பது குறித்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும்ஜூலை 2வது வாரம் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ள நிலையில் வழக்கில்புதிய திருப்பம் ஏற்பட்டது.
ஆசிரியை மீனாட்சி கடைசியாக தென்பட்ட பணிக்கம்பட்டி, மருதூர் என்ற இடத்தில்உள்ள ஒரு வயலில் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதாக அந்த வயலின்தோட்டக்காரர் போலீஸில் புகார் கொடுத்தார். தனது வாழைத் தோட்டத்தில் பள்ளம்தோண்டும்போது எலும்புக் கூடு சிக்கியதாக அவர் தெரிவித்தார். இந்த வயல் ராமசாமிஎன்பவருக்கு சொந்தமானது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த எலும்புக்கூட்டை தோண்டி எடுத்தனர்.அது மீனாட்சியின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் மருத்துவக்குழுவினரும், சென்னையிலிருந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
![]() |
| கணவர் ஜோதிராமலிங்கத்துடன் மீனாட்சி |
இன்று காலை அந்த எலும்புக்கூட்டை அடையாளும் காணும் பணி நடந்தது. இதற்காகமீனாட்சியின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் எலும்புக் கூடுதோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் திருச்சியிலிருந்து வந்த மருத்துவர் குழு எலும்புக்கூட்டை பரிசோதனை செய்தது. அப்போது எலும்புக் கூட்டின் மீது இருந்த சேலைமீனாட்சியின் சேலைதான் என்று அவரது அண்ணன் மனைவி பானுமதி, ஆசிரியைசித்ரா உள்ளிட்டோர் அடையாளம் காட்டி கதறி அழுதனர்.
ஆனால், இந்த சேலை என் மனைவியுடையது தானா என்று தனக்கு நினைவில்லைஎன மீனாட்சியின் கணவர் சேது ராமலிங்கம் கூறினார்.
இதையடுத்து எலும்புக்கூட்டின் சில பகுதிகளை தடயவியல் சோதனைக்காகமருத்துவர் குழு சேகரித்தது.
இருப்பினும் மீனாட்சி காணமல் போய் 19 மாதங்களாகியும், எலும்புக்கூட்டின் பலபகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதும்,சேலையில் எந்தவித சேதம் இல்லாமல்இருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அவர் சமீபத்தில் தான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றுதெரிகிறது.
பார்க்க மிக அழகாக இருந்த மீனாட்சிக்கு அந்தப் பகுதி விஐபிக்கள் சிலரும் பாப்பாசுந்தரத்தின் ஆட்களும் வலை வீசியதாகக் கூறப்படுகிறது.















Click it and Unblock the Notifications