ராஜ்யசபா எம்பி-வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்குநடக்கவுள்ள இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

திமுகவிலிருந்து விலகிய சரத்குமார், தனது ராஜ்யசபா எம்.பி பதவியையும் ராஜினாமாசெய்தார். இதையடுத்து அந்த இடத்திற்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜூலை 3ம் தேதி வரை இதற்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். 4ம் தேதி மனுக்கள்பரிசீலனை செய்யப்படும். போட்டி இருந்தால் 13ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

இத்தேர்தலில் திமுக சார்பில் கே.பி.கே. குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தினகரன் நிறுவனர் மறைந்த கே.பி.கந்தசாமியின் மகனான இவர், சரத்குமாரின்அக்காள் மகனாவார். மேலும் தினத் தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனின் மருமகன்.

வேட்பு மனுத் தாக்கலின் முதல் நாளான நேற்று சுயேச்சை வேட்பாளராக பத்மராஜன்என்பவர் மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில்போட்டியிட்டுத் தோல்வி அடைவது பத்மராஜனின் வழக்கம்.

குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கூட இவர் போட்டியிட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இருப்பதால் அக்கட்சியின் வேட்பாளர்குமரன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+