போலீஸ் மீது நாய்களை ஏவி விட்டு தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

மதுக் கடையை மூடச் சொன்ன போலீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் மீதுநாய்களை ஏவி விட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் புதுவையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இன்று 2வது கட்ட வாக்குப்பதிவுநடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் 25ம் தேதி மாலை 5 மணியுடன்முடிவடைந்தது. மதுக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்றும்ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய போலீஸாரும்,கலால்துறையினரும் ரோந்து சுற்றி வந்தனர்.

காலாப்பட்டு பகுதியில் தாசில்தார் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் மதுக் கடைகள்மூடப்பட்டிருக்கிறதா என்று சோதனை நடத்தினர்.

சில சாராயக் கடைகள் மூடப்படாமல் இருந்ததால் அவற்றை மூடுமாறு எச்சரித்தனர்.

அதே போல சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் சர்க்கிள் டி பொயட் என்றஹோட்டலின் பார் திறக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாரை மூடுமாறு அதிகாரிகள்உத்தரவிட்டனர்.

நாய்களை ஏவிய பார் உரிமையாளருக்கு போலீஸ் நடத்திய ஸ்பெஷல் கவனிப்பு.
இதனால் ரத்தக்களறியாய் நிற்கிறார்.

ஆனால் அதைக் கேட்காத ஹோட்டல் உரிமையாளர் அதிகாரிகளுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஹோட்டல் ஊழியர்கள் அதிகாரிகளைபாருக்குள் அடைத்து வைத்து அடிக்கத் தொடங்கினர். இரும்புக் குழாய்,அரிவாள்களை வைத்து அதிகாரிகளை தாக்கினர்.

இதையடுத்து ஒரு அதிகாரி அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்தார். உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். இதைப்பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் ஹோட்டல் வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தநாய்களை அவிழ்த்து விட்டனர்.

இதை எதிர்பார்க்காத போலீஸார் நிலை குலைந்தனர். நாய்கள் போலீஸாரை விரட்டிவிரட்டி கடிக்க ஆரம்பித்தன. இதில் மதுரையைச் சேர்ந்த காவலர் ஜோசப் என்பவர்காயமடைந்தார்.

இதையடுத்து போலீஸ் அதிரடிப்படைக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்துநாய்களை விரட்டியடித்து அதிகாரிகளையும் போலீசாரையும் மீட்டனர்.

பின்னர் பாருக்குள் புகுந்த அதிரடிப்படையினர் ரெளடித்தனம் செய்த ஹோட்டல்உரிமையாளர் மற்றும் அதிகாரிகளைத் தாக்கிய பார் ஊழியர்களை சரமாரியாக அடித்துஉதைத்தனர்.

வாய், மண்டை எல்லாம் உடைந்த நிலையில் அந்தக் கும்பலை போலீசார் கைதுசெய்து இழுத்துச் சென்றனர்.

பார் ஊழியர்கள் தாக்கியதில் வருவாய் ஆய்வாளர் தயாநிதி, டிரைவர் வாழுமணி,போலீஸார் விஜயன், வேல்முருகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளை தாக்கியது, நாய்களை ஏவி விட்டது ஆகியவற்றுக்காக பார்-ஹோட்டல்உரிமையாளர்களான ராஜ்குமார் ஸ்டீபன், ராஜ்குமார் மேக்ஸ் மற்றும் ஊழியர்கள் 2பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகி விட்ட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் சகோதரர்களின் மூத்த சகோதரரான ஜில் ராஜ்குமார்பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர். அவர் தற்போது பிரான்ஸில் உள்ளார்.

கைதானவர்களும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தான். ஜில் ராஜ்குமார்பெண்ணை மானபங்கப்படுத்தியது, விதிமுறைகளை மீறி ஹோட்டலை நடத்தியது,உள்ளூர் போலீஸ்காரர்களை அடித்தது உள்ளிட்ட 6 வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

இதனால்தான் அவர் ஹோட்டல் மற்றும் பாரை சகோதரர்களிடம் கொடுத்து விட்டுபிரான்ஸ் போய் விட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும், அவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்குதண்டனை வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+