ஹனிமூன் கொலை: முக்கிய சாட்சியை குற்றவாளியாக்க முயற்சி?
மூணாறு:
![]() |
மேலும் வித்யாவைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த அனந்தராமனும், அவரது மனைவிவித்யாவும் மூணாறுக்கு தேனிலவுக்குப் போன நேரத்தில் அனந்தராமன் படுகொலைசெய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் அவரது மனைவி வித்யாவே சிக்கினார். தனது பள்ளிக்காலகாதலரான ஆட்டோ டிரைவர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அன்புராஜ்ஆகியோருடன் சேர்ந்து வித்யா இந்தக் கொலைக்குத் திட்டமிட்டது விசாரணையில்தெரிய வந்து தமிழகம் மற்றும் கேரள மக்கள் அதிர்ந்தனர்.
![]() |
அவரது சமயோசித நடவடிக்கையால் இருவரும் கொலை நடந்த சில மணிநேரங்களிலேயே போலீஸ் கையில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுவித்யாதான் கொலைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து வித்யா, ஆனந்த், அன்புராஜ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந் நிலையில், வித்யாவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வித்யா தரப்புபல ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவரது பெயர் இதுவரை முதல் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து ஆனந்த்தின் வழக்கறிஞர்களான ஜான்சன் பீட்டர், மேத்யூ ஆகியோர்கூறுகையில்,
வித்யாவின் பெயரை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும். காரணம்அவர்தான் கொலைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர். சட்டப்படி, தவறுசெய்தவர்களை விட அந்தத் தவறுக்கு திட்டமிட்டவர்கள் அல்லதுதூண்டுவித்தவர்கள்தான் முதல் குற்றவாளி.
எனவே வித்யாவைத்தான் முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஆனந்த்தையும், அன்புராஜையும் முதல் குற்றவாளிகளாக போலீஸார்சேர்த்துள்ளனர். வித்யாவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சிகள் நடக்கின்றன.
![]() |
அதேபோல மூணாறு ஆட்டோ டிரைவர் அன்பழகனை இந்த வழக்கில்குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. குற்றம்நடப்பதற்குத் துணை போனார் என்று கூறி அன்பழகனையும் இந்த வழக்கில் இழுத்துவிட போலீஸ் தரப்பில் முயற்சி நடப்பதாக அங்குள்ள ஆட்டோ டிரைவர் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை மூணாறு போலீஸார் மறுத்துள்ளனர்.
இதற்கிடையே அன்புராஜ் குறித்த மர்மம் வலுத்து வருகிறது. அவருக்காக வாதாடவக்கீல் யாரும் வரவில்லை. அவரது குடும்பத்தினரோ, உறவினர்களோ இதுவரைசிறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வித்யாவை மீண்டும் போலீஸார் விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி வித்யா தரப்பில் தேவிகுளம் முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வித்யா சார்பில் ஆஜரானவழக்கறிஞர் தாமஸ் வாதிடுகையில்,
இது சாதாரண விஷயம். இதை பெரிதுபடுத்தி விட்டார்கள். இந்த வழக்கில்வித்யாவுக்குத் தொடர்பு இல்லை. அவர் அப்பாவி. எனவே மறுபடியும் வித்யாவைபோலீஸ் காவலில் அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் அனுமதிப்பதா என்பது குறித்து இன்றுதேவிகுளம் மாஜிஸ்திரேட் தீர்ப்பு அளிக்கவுள்ளார்.
வித்யாவின் வக்கீல் புது கதை:
இதற்கிடையே வித்யாவின் வழக்கறிஞர் ஜோஸ் மேத்யூ நேற்று சிறையில் வித்யாவை சந்தித்தார். பின்னர் அவர்கூறுகையில்,
வித்யாவுக்கும் ஆனந்துக்கும் பள்ளியில் படிக்கும்போது நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்திக்கவில்லை. 4வருடத்துக்கு பின் வித்யாவுடன் மீண்டும் பழக ஆரம்பித்தான் ஆனந்த். ஆனால், அந்த நேரத்தில் அனந்தராமனைவித்யாவுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள்.
இதைப் பிடிக்காத ஆனந்த், தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வித்யாவை வற்புறுத்தியுள்ளான்.இதை வித்யா ஏற்கவில்லை.
இந் நிலையில் வித்யாவும் அனந்தராமனும் திருமணம் முடிந்து ஹனிமூன் போவதை தெரிந்து கொண்டான்ஆனந்த். இதையடுத்து வித்யாவை தொடர்பு கொண்ட ஆனந்த், எந்த இடத்துக்கு ஹனிமூன் போகிறீர்கள் என்றுகேட்டுள்ளான். சொல்லாவிட்டால் உன் அம்மாவைக் கொல்வேன் என்று மிரட்டினான்.
இதனால் எங்கெங்கு போகிறோம், எப்போது போகிறோம், எங்கு தங்குகிறோம் என்ற விவரதத்தை ஆனந்துக்குவித்யா சொன்னார். இது அனந்தராமனுக்கும் தெரியும்.
இதையடுத்து வித்யா-அனந்தராமனுக்குத் தெரியாமல் அவர்களை ஆனந்தும் அவனது கூட்டாளியும் பின்தொடர்ந்தனர். மூணாறு குண்டலா அணைப் பகுதியில் வைத்து ஆனந்தும் அவரது நண்பர்களும் அனந்தராமனைவித்யாவின் கண் எதிரிலேயே அடித்துக் கொன்றனர். பின்னர் வித்யாவின் 4 பவுன் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.
இதனால் இந்தக் கொலையில் வித்யாவுக்கு துளியும் தொடர்பில்லை என்று புதுக் கதை விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications