மணல் கொள்ளை-தடுக்க முயன்ற ஏட்டு லாரி ஏற்றி கொலை
பொன்னேரி:
பொன்னேரி பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்ஏட்டு லாரி ஏறி கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை, கூவம் ஆற்றுப்ப டுகைகளில் தமிழக அரசின் மணல் குவாரிகள்செயல்பட்டு வருகின்றன. பொதுப்பணித் துறையினர் இங்கிருந்து மணல் எடுத்து தனியாருக்கு நேரடியாகவிற்பனை செய்து வருகிறார்கள்.கடந்த சில மாதங்களாக வெளி மார்க்கெட்டில் மணல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதைப் பயன்படுத்திதிருவள்ளூவர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது.
நள்ளிரவிலும் அதிகாலையிலும் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் சட்ட விரோதமாக இங்கு மணல் எடுத்துச்செல்லப்படுகிறது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் இருந்துபோலீசார் அதிகாலையில ரோந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி ராஜேந்திரன் உத்திரவிட்டார்.
இதனால் கடந்த சில வாரங்களாக போலீசார் ஆற்றுப் படுகைகளில் ரோந்து சென்று வருகிறார்கள். பொன்னேரிதாலுகா பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலை தடுக்க பெரியபாளையம்போலீஸ் ஏட்டுகள் அண்ணாமலை, பன்னீர்செல்வம் ஆகியோர் ரோந்து பணிக்கு வந்தனர்.
அப்போது பெரியபாளையம் திருப்பத்தில் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியைநிறுத்தமாறு போலீஸ் ஏட்டுகள் சைகை காட்டினார்கள். ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாகஓட்டினார்.
இதனால் லாரியை தடுத்து நிறுத்துவதற்காக போலீஸ் ஏட்டு அண்ணாமலை ரோட்டுக்கு வந்தார். அப்போதும்லாரியை டிரைவர் நிறுத்தாமல் ஏட்டு மீது மோதி விட்டு லாரியை வேகமாக ஓட்டிச் சென்று விட்டார்.
லாரி மோதியதில் ஏட்டு அண்ணாமலை அதே இடத்திலேயே பலியானார்.
அந்த லாரியின் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு வேறு காரணம் உண்டா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்புமணல் கொள்ளையில் தடுக்கும் பணியில் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர், கனிமவளத்துறையினர் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த பொறுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் மணல் கொள்ளையர்கள்-போலீசார் இடையே மாமூல் தகராறும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
லாரி ஏற்றி கொல்லப்பட்ட போலீஸ் ஏட்டு அண்ணாமலைக்கு சாந்தி (35) என்ற மனைவியும், லட்சுமி, சர்மிளா,நளினி, சித்ரா என்று மகள்களும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications