ஜனனி மீது மேலும் 2 வழக்குகள்
மதுரை:
ஜனனி மீது கள்ள நோட்டு தயாரித்தல், கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ்புதிதாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் கீழ் ஜனனி கைது செய்யப்பட்டால்ஜாமீனில் வெளியில் வர முடியாது.
இதற்கிடைய ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்டு வங்கியில் டெபாசிட்செய்யப்பட்டுள்ள ரூ. 1.40 கோடி பணத்தை சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கவேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கஞ்சா கடத்தல் வழக்கில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ்ஆகியோர் கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து ரூ. 1 கோடியே 40 லட்சத்து18,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
வங்கியில் டெபாசிட் செய்திருந்த இந்த பணத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜனனி உள்ளிட்ட 4 பேர் மீது கள்ள நோட்டுவழக்குப் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில், தற்போது வருமான வரித்துறை வசம் உள்ள இந்தப்பணத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், ஜனனியின் பாஸ்போர்ட் மற்றும் வருமான வரித்துறை இந்தப் பணம்தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதங்களின் ஆவணங்கள், நகல்களைஎங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ, ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்டபணம் எந்த வங்கியில் உள்ளதோ, அந்த வங்கியின் அதிகாரிகள் பணத்தை சிபிசிஐடிவசம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ஜனனியின் பாஸ்போர்ட் நகலை இந்த நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.வருமான வரித்துறை அதிகாரிகள் ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதம் உள்ளிட்டஆவணங்களையும் போலீஸாரிடம் ஒப்படைகக் வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந் நிலையில் ஜனனி மீது இந்திய தண்டனைச் சட்டம் 489 (ஏ) (கள்ள நோட்டு தயாரித்தல்), 489 (பி) (கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்குகளின் கீழ் ஜனனி கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வெளியில் வர முடியாது.
இந்த புதிய வழக்குகள் போடப்பட்டது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் மூலமாக சிபிசிஐடி போலீசார்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்பு ஜனனி மீது கள்ள நோட்டுக்களை வைத்திருந்த வழக்கு மட்டுமேபோடப்பட்டது நினைவுகூறத்தக்கது.
கள்ளப் பணமே: அரசு உறுதி
இந் நிலையில் ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் இருந்த ரூ. 30 லட்சம் கள்ளப் பணம் தான் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அரசுவழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ரகுபதி முன்னிலையில் இன்று விசாரணைக்குவந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ இளங்கோவிடம், வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஜனனி தரப்பு பணம் புழக்கத்தில்விடப்பட்டதா என நீதிபதி கேட்டார்.
அதற்கு அரசு வக்கீல், இல்லை என்று பதில் அளித்தார். மேலும், ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ. 30 லட்சம் கள்ளப் பணம். இந்தநோட்டுக்கள் அனைத்தும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். அந்த நோட்டுக்களில் உள்ள எண்கள் அடங்கிய பணம் மும்பை மற்றும் டெல்லியில்உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் உள்ளன என்றார்.
இதையடுத்து முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications