இலங்கை விரையும் இந்திய வெளியுறவு செயலாளர்
டெல்லி:
இலங்கை பிரச்சினை குறித்து அதிபர் ராஜபக்ஷேவுடன் விவாதிப்பதற்காக இந்தியவெளியுறவுத் துறைச் செயலாளர் ஷியாம் சரண் கொழும்பு விரைகிறார்.
திார்வே தூதுக் குழுவின் முயற்சியில் போடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இலங்கைஅரசு மீறி வருவதால் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும்இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. அரசுத் தரப்பினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், இலங்கை விஷயத்தில் இதுவரை அமைதி காத்து வந்த இந்தியாஇப்போது தமிழக கட்சிகளின் நெருக்குதல் காரணமாக இதில் தலையிடஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை வகாரம் குறித்துப் பேசுவதற்காக சமீபத்தில் இலங்கைவெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லி வந்திருந்தார். பிரதமர்மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோருடன் அவர்பேசினார்.
இந் நிலையில் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரணை கொழும்புக்கு அனுப்பிவைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் கொழும்புவிரைவார் எனத் தெரிகிறது.
அங்கு அதிபர் ராஜபக்ஷே, சமரவீரா உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
தற்போதைய நெருக்கடியைக் தணிக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும்தொடங்குவதற்கும் இந்தியாவின் யோசனைகளை ராஜபக்ஷேவிடம் சரண்தெரிவிப்பார்.
குண்டுவெடிப்பில் 3 பேர் பலி:
இதற்கிடையே திரிகோணமலையில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர், ஒரு ஊர்க்காவல் படை காவலர் மற்றும் பொது மக்களில் ஒருவரும்பலியாயினர். விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications