கோவை சிறையில் மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு இன்று முதல் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

பல்வேறு நோய்களால் அவதிப்படும் அவருக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் மருத்துவ பரிசோதனைநடத்தப்பட்டது. கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற மதானி விரும்பினார்.

ஆனால் அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. கோவை சிறையிலேயே அவருக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்கப்பட உள்ளது. மதானிக்கு இன்று கோவை ஆரிய வைத்திய சாலையைச் சேர்ந்த டாக்டர்கள் சிகிச்சைஅளிக்கின்றனர்.

வைத்திய சாலையின் பொது மேலாளர் டாக்டர் கெளரிசும், டாக்டர் கேசவனும் இது தொடர்பாக கோவை சிறைகண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் மதானியை நேற்று முன் தினம் சந்தித்தனர்.

குண்டு வழக்கு: வாதம் தொடங்கியதுஇதற்கிடையே கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சிகள் விசாரணைமுடிவடைந்து வழக்கறிஞர்கள் வாதம் இன்று தொடங்கியது.

கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில்50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா, அவரது மகன்அன்சாரி, மதானி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கில்சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. 1000க்கும் மேற்பட்ட சாட்சிகள்விசாரணையில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று வக்கீல்கள் வாதம் தொடங்கியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜஇளங்கோ வாதத்தைத் தொடங்கி வைத்து வாதிட்டு வருகிறார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் வாதம் புரிவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+