தாலி கட்டும் நேரத்தில் கலாட்டா: கணவரின் 2ம் கல்யாணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு விட்டு வேறு பெண்ணை மணக்கமுயற்சித்ததாலும், பண மோசடி செய்ததாலும் கோபமடைந்த பள்ளி ஆசிரியை,தன்னை ஏமாற்றியவரின் கல்யாணத்தை கடைசி நேரத்தில் தலையிட்டுத் தடுத்தார்.

இதனால் கல்யாண மண்டபம் பரபரப்பில் மூழ்கியது. சென்னை கொளத்தூர் பாரதி நகரைச் சேர்ந்த தெய்வசிகாமணிக்கும்,பிரியதர்ஷினிக்கும் திருமணம் நிச்சயமானது. நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

செங்குன்றம் மகராசி திருமண மண்டபத்தில் இதற்காக இரு வீட்டாரும்குழுமியிருந்தனர்.

உறவினர்களும் வர ஆரம்பித்தனர். கல்யாண மண்டபத்தில் கல்யாணக் களை கட்டத்தொடங்கியிருந்தது.

தெய்வசிகாமணியின் அண்ணன் மனைவி தேர்தல் அதிகாரியாக இருப்பதால் முதல்நாள் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ்குப்தாவும் கலந்து கொண்டு தெய்வசிகாமணி, பிரியதர்ஷினியை வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை திருமணத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தநிலையில், ஒரு பெண் ஏகப்பட்ட ஆட்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்தார்.

சினிமாவில் வருவது போல கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று ஆவேசமாக கூறியபடிவந்த அவரைப் பார்த்து பெண் வீட்டார் குழப்பமடைந்தனர்.

என்ன ஆச்சு, யார் நீங்கள் என்று அவர்கள் அப்பெண்ணிடம் கேட்டனர். அப்போதுகுறுக்கிட்ட மணமகன் வீட்டார், ஒன்றும் இல்லை, நாங்கள் பேசிக் கொள்கிறோம்,கல்யாண ஏற்பாடுகள் நடக்கட்டும் என்று தலையிட்டனர்.

ஆனால் அதைப்பொருட்படுத்தாத மணமகளின் தந்தை அந்தப் பெண்ணிடம் யார்நீங்கள், எதற்காக கல்யாணத்தை நிறுத்தக் கூறுகிறீர்கள் என்று வினவினார்.

அதற்கு அப்பெண் கூறுகையில், எனது பெயர் தமிழரசி, நான் பள்ளியில்ஆசிரியையாக உள்ளேன். தெய்வசிகாமணியை எனக்குத்தான் முதலில் பார்த்தார்கள்.பின்னர் ஜாதகம் பொருத்தமாக இல்லை என்று கூறி வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

தெய்வசிகாமணியின் வீடும், எனது வீடும் அருகருகே இருந்ததால் இருவரும்அவ்வப்போது பார்த்து பழகத் தொடங்கினோம். என்னை எப்படியாவது கல்யாணம்செய்து கொள்வதாக தெய்வசிகாமணி என்னிடம் உறுதியளித்தார்.

இதனால் நான் அவருடன் தொடர்ந்து பழகினேன். இந்த நிலையில் எனக்குநாகதோஷம் இருப்பதாகவும், காளஹஸ்தி சென்று கழிக்க வேண்டும் என்றுதெய்வசிகாமணி கூறினார்.

இதையடுத்து எனது வீட்டுக்குத் தெரியாமல் அவருடன் காளஹஸ்தி சென்றேன்.பின்னர் நாகதோஷ பூஜை செய்தோம். அதன் பின்னர் திருப்பதியில் வைத்து எனக்குதெய்வசிகாமணி தாலி கட்டினார்.

அன்று இரவு இருவரும் விடுதியில் உடலுறவும் வைத்துக் கொண்டோம். இந்தநிலையில் ஊர் திரும்பிய என்னை அணுகிய தெய்வசிகாமணியின் நண்பர் ஒருவர் ரூ.1லட்சம் தருகிறோம், தெய்வசிகாமணியை விட்டுப் பிரிந்து விடு என்றார்.

அதிர்ச்சி அடைந்த நான் தெய்வசிகாமணியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அவர்தடுமாற்றத்துடன் பேசினார். இதையடுத்து அவர் வேலை பார்க்கும் நிறுவனமேலதிகாரியை அணுகி நடந்ததைக் கூறினார்.

ஆனால் அவரோ, பேசித் தீர்க்கலாம், பணம் வாங்கித் தருகிறேன் என்று கூறினார்.இதற்கு மேலும் பொறுமை காப்பது நல்லதல்ல என்று நினைத்த நான்தெய்வசிகாமணியின் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறப்போனேன்.

அப்போதுதான் தெய்வசிகாமணிக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் என்பதுதெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த நான் திருவொற்றியூர் போலீஸில் புகார்கொடுத்தேன்.

கல்யாணத்திற்கான ஆதாரம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டபோது, திருப்பதியில்நாங்கள் தங்கியிருந்த விடுதியின் ரசீதைக் காட்டினேன். மறு நாள் வருமாறு அப்போதுபோலீஸார் தெரிவித்தனர்.

இப்போது நீதி கேட்பதற்காக எனது பகுதி கவுன்சிலர் மற்றும் மக்களுடன்வந்துள்ளேன் என்றார் தமிழரசி. இதைக் கேட்டதும் மணமகள் வீட்டார் அதிர்ச்சிஅடைந்தனர்.

இந்த நிலையில் எனக்குத் திருமணம் வேண்டாம், இவரை மணக்க விரும்பவில்லைஎன்று கூறி மணமகள் பிரியதர்ஷினி கழுத்தில் போட்டிருந்த மாலையைக் கழற்றிவிட்டார். பின்னர் மணமகள் வீட்டாரும், உறவினர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில் அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தமிழரசி மற்றும்தெய்வசிகாமணி தரப்பினரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது நான் தமிழரசி கழுத்தில் தாலி கட்டவில்லை என்று மறுத்ததெய்வசிகாமணி, காளஹஸ்தி போனதையும், நாகதோஷ பூஜை நடத்தியதையும்ஒப்புக் கொண்டார்.

ஆனால் தமிழரசி தனது நிலையில் உறுதியாக இருந்தார். இதையடுத்து இருதரப்பினரும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று போலீஸார்கூறி விட்டுச் சென்று விட்டனர்.

கல்யாணம் நின்று போனதால் அனைவரும் மண்டபத்தை விட்டுக் காலி செய்தனர்.தெய்வசிகாமணியும், தமிழரசியும் போலீஸில் புதிய புகார் கொடுப்பதற்காக தங்களதுதரப்பினருடன் அங்கிருந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+