என்எல்சி-ஊழியர்களுக்கே பங்குகளை விற்க பிரதமர் சம்மதம்
நெய்வேலி:
10 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துநெய்வேலி அனல் மின் கழக ஊழியர்கள் இன்று காலை உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
உண்ணாவிரதத்தை ஜெயலலிதா தொடங்கி வைக்கக் கூடும் என கூறப்பட்டது.ஆனால் அவர் வரவில்லை.இதற்கிடையே இந்தப் பங்குகளில் குறிப்பிட்ட அளவை நெய்வேலி சுரங்கஊழியர்களுக்கே விற்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர்கருணாநிதியின் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாக இன்று பிரதமர்அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், அதைத் திரும்பப்பெறக் கோரியும் கடந்த 26ம் தேதி முதல் என்.எல்.சி. ஊழியர்கள் தொடர்போராட்டத்தில குதித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக விதிப்படி வேலையை செய்துவந்தனர். இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
என்.எல்.சி பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில்ஊழியர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். போராட்டத்தைதொழிற்சங்கத் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இப்போராட்டத்தைஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார் என்று ஊழியர்கள்எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜெயலலிதா வரவில்லை. இதற்கிடையே அசம்பாவிதம் ஏற்படுவதைத்தடுக்க போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கிடடத்தடட 2,000போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஊழியர்கள் குதிக்கிறார்கள். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதனால் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மின் வினியோகம் கடுமையாகபாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
கருணாநிதி நாடகம்: திருமாவளவன்
முன்னதாக நெய்வேலி என்எல்சி பங்கு விற்பணையில் கருணாநிதி நாடகமாடுகிறார் என விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாளவன் கூறினார்.
நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது,
நெய்வேலி என்எல்சி மற்றும் நாஸ்கோ நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட விடுதலைசிறுத்தைகள் அமைப்பு போராட்டத்தில் குதிக்கும்.
என்எல்சி பங்குகளை விற்பனை செய்வதென முடிவெடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கெடுத்த திமுக மற்றும் கூட்டணி அமைச்சர்கள் ஆதரித்திருந்தலோஅல்லது அதில் கலந்து கொண்டு அந்த முடிவை எதிர்க்காமல் இருந்தாலோ அந்த இரண்டு செயலுமே கண்டிக்கத்தக்கதாகும்.
சுமங்கலி தொலை காட்சி சேனலுக்கு பிரச்சினை வந்தபோது கவர்னரையும், 3 வது அணி உருவாகும் சூழ்நிலையில் டெல்லிக்கு சென்ற கம்யூனிஸ்ட்தலைவர்களையும் சந்தித்த கருணாநிதி என்எல்சி பங்குகளை விற்பனையை எதிர்த்து பிரதமருக்கு வெறும் கடிதமும் பேக்சும் அனுப்பிக் கொண்டு நாடகமாடுவதுஏன் என்றார்.
கருணாநிதி கோரிக்கை:
இதற்கிடையே நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தொழிலாளர்களுக்கே விற்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்குகோரிக்கை விடுத்தார்.
பிரதமர் ஏற்பு:
இதையடுத்து விற்கப்படும் பங்குகளில் குறிப்பிட்ட அளவை தொழிலாளர்களுக்கே வழங்குவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
பங்குகளையும் விற்கையில் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பெரும் அளவிலான பங்குகளை தொழிலாளர்களே வாங்கிக் கொள்ளவகை செய்யப்படும் என இன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருணாநிதியிடம் பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் செய்திக் குறிப்பில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications