தனியார் துறையில் இட ஒதுக்கீடு: சட்டசபையில் தீர்மானம்- ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை உறுதி செய்ய சட்டசபைபட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து மற்றமாநிலங்களுக்கு தமிழகம் உதாரணமாகத் திகழ வேண்டும்.தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அளவற்ற அதிகாரங்களுடன்திகழ்கின்றன. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்குத்தான் இவை அதிகஇடங்களை ஒதுக்குகின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் இடங்களில் 75 சதவீத சீட்களைதமிழக மாணவர்களுக்கே ஒதுக்க தமிழக அரசு உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
நலிவடைந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை மிகப் பெரிய தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்க மறுக்கிறார்கள். இதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு,நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கும் நல்ல பள்ளிக் கூடங்களில் படிக்கும்வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற ஒரு சட்டத்தை டெல்லி மாநில அரசு கொண்டு வந்து கல்வித்துறையில்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை மட்டுமே நிர்வாகஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். கேரளாவில் இந்தநிலைதான் உள்ளது. இதை தமிழகத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவில்களிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல, தமிழில் அர்ச்சனை செய்யும்பயிற்சியையும் பூசாரிகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் டெல்லி வந்தார். அவர், இந்திய அரசுடன்என்ன பேசினார் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் மூடு மந்திரம் இருக்கக்கூடாது. இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும், இலங்கையும்வெளிப்படையாக பேச வேண்டும். இலங்கை அரசுக்கு எந்தவிதமான ராணுவஉதவியையும் இந்திய அரசு செய்யக் கூடாது.
இலங்கைக்கு ரேடார் வசதிகளை இந்தியா கொடுக்க முடிவு செய்திருப்பது மிகவும்தவறான முடிவாகும். இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமைகளை மீறும் செயலில்ஈடுபட்டு வருகிறது. தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. அதைத் தடுத்துதமிழர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும்.
உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர், சமூக நீதியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்லமாறாக அரசியல் சட்டத்தையே எதிர்ப்பவர்கள் ஆவர் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications