ரீகல் சொட்டு நீலம் நிறுவனர் மனைவி, பேத்தியுடன் தற்கொலை
கோவை:
ரீகல் சொட்டு நீலம் நிறுவனர் தனது 2வது மனைவி மற்றும் பேத்தியுடன் தற்கெலை செய்து கொண்டார்.
கோவை ஆர்எஸ் புரம் மேற்கு பாஷ்யகாரலு ரோட்டில் வசித்து வந்த முருகேசன் (65), இவருக்கு 2 மகன், 2மகள் உள்ளனர். இவரது முதல் மனைவி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இவரது 2வது மனைவி பானு (45), இருவரும் பாஷ்யகாரலு ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இவர்களுடன் பானுவின் பேத்தி ரம்யாவும் (7) இருந்து வந்தார்.
முருகேசன் பிரபல ரீகல் சொட்டு நீலம் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அந்த நிறுவனத்தை தற்போது மகன்கள்நடத்தி வருகின்றனர். முருகேசன் தனியாக சீயரா என்ற பெயரில் கிளீனிங் பவுடர், பினாயில் தயாரிப்புநிறுவனத்தை நடத்தி வந்தார்.
முருகேசனின் வீடு இன்று காலை வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் கிடந்தது. அக்கம் பக்கத்தினர் ஆர்எஸ்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அங்கு வந்த போலீசார் முருகேசனின் வீட்டுக்குள் சென்றனர்.
அங்கு பானு பேனில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். முருகேசன், குழந்தை ரம்யாஆகியோர் விட்டத்தின் கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதை போலீசாருக்கு முருகேசன் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில்எனக்கு தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கடன் சுமையை சமாளிக்க முடியவில்லை. எனக்கு வரும்செக்குகளும் ரிட்டர்ன் ஆகிவிடுகிறது. கடன் தொல்லையாலும், தொழில் நடஷ்டத்தாலும் இந்த முடிவை நாங்கள்மூவரும் சேர்ந்து எடுத்துள்ளோம். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை.
மேலும் எங்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications