தேமுதிக கூட்டத்தில் அடிதடி; ஓட்டம் பிடித்த பெண்கள்
பழனி:
பழனியில் நடந்த தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்அடிதடி, ரகளை நடந்தது. இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆர்.எப். சாலையில் உளள கல்யாண மண்டபத்தில் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல்ஆலோனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.பெண்களும் பெரும் திரளாக வந்திருந்தனர்.இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் பேசினார். அப்போது பழனிதொகுதியில் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றபி.கே.சுந்தரத்தின் ஆதரவாளர்கள் எழுந்து, கூட்டத்திற்கான நோட்டீஸில் சுந்தரத்தின்பெயர் போடாதது ஏன் என்று கேட்டு ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு ரவிக்குமார் பதில் சொன்னார். ஆனால் அதில் திருப்தி அடையாத சுந்தரத்தின்ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால்அதற்குப் பலன் இல்லை.
இந்த வாக்குவாதம் பின்னர் அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறிகடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இருக்கைகள், நாற்காலிகள் பறந்தன.
ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து அடித்துக் கொண்டு உருண்டனர். இந்த மோதலைப்பார்த்து பயந்து போன பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஆயக்குடி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களை மாவட்ட தலைமைபுறக்கணிக்கிறது. இதனால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று சுந்தரத்தின்ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக பிற கட்சிகளில்தான் இதுபோன்ற கலாட்டாக்கள் நடக்கும். இப்போதுதேமுதிகவிலும் அது எட்டிப் பார்த்துள்ளது.
தென்னை மரம் முறிந்தது; தப்பினார் கேப்டன்:
இதற்கிடையே தர்மபுரி பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜயகாந்த்துக்கு அருகே தென்னை மரம்திடீரென முறிந்து விழுந்தது. நல்ல வேளையாக விஜயகாந்த் உயிர் தப்பினார்.
பேரரசு இயக்கத்தில் தர்மபுரி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் விஜயகாந்த்நடிக்கிறார். அணல் பறக்கும் வசனங்களுடன் கூடியதாக இந்தப் படத்தை பேரரசுஉருவாக்குகிறார்.
பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தர்மபுரி யூனிட் தற்போதுஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ளது.
வடக்கு உத்தரவீதியில் ஒரு பாடல் காட்சியை பேரரசு படம் பிடித்தார்.
இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் டான்ஸ் ஆடினார். அவருடன் ஏராளமான குரூப்டான்ஸர்களும் ஆடினர். பிற்பகலுக்கு மேல் ஓய்வுக்காக விஜயகாந்த் ஹோட்டலுக்குக்கிளம்பினார்.
அவர் கார் சென்ற சில விநாடிகளில் அப்பகுதியில் சாலையையொட்டி இருந்த ஒருதென்னை மரம் முறிந்து கீழே விழுந்தது.
தென்னை மரம் விழுந்த சாலையில்தான் விஜயகாந்த் கார் சென்றது. கார் மீது மரம்விழுந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுதவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications