கோவை தொழிலதிபர் சுட்டுக் கொலை: பிரபல தாதாவுக்கு வலைவீச்சு!
கோவை :
கோவையைச் சேர்ந்த ஆட்டோ கன்சல்டிங் நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்றுசுட்டுக் கொன்ற பிரபல ஆள் கடத்தல் தாதா உள்பட 8 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கோவை ஜெயப்பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். தூத்துக்குடி மாவட்டம்ஏரல் இவருக்கு சொந்த ஊர். கோவையில் கார்களை வாங்கி விற்கும் ஆட்டோகன்சல்டிங் தொழிலை நடத்தி வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்குஇரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந் நிலையில் மகேஸ்வரி, மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார்கொடுத்த்தார். அதில், எனது கணவர் 2ம் தேதி காலை 7 மணியளவில்,விநாயகபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கூப்பிடுவதாகவும், போய் பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. குணசேகரன் என்பவருடன்தான்அவரது பைக்கில் எனது கணவர் சென்றார். சுமார் 1 மணி நேரம் கழித்து குணசேகரன்மட்டும் திரும்பி வந்தார்.
பரமசிவம், ஜான் உள்ளிட்ட 5 பேர் எனது கணவரை டாடா சுமோ காரில் அழைத்துச்சென்றதாகவும், தொழில் விஷயமாகப் பேசப் போவதாக எனது கணவர் கூறியதாகவும்குணசேகரன் தெரிவித்தார்.
எனது கணவருடன் நான் செல்போனில் பேச முயன்றேன். ஆனால் அவரதுசெல்போன் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. எனது கணவருக்கு தொழில் ரீதியாகநிறைய எதிரிகள் உள்ளனர். எனவே அவர்களால் எனது கணவரின் உயிருக்கு ஆபத்துஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுகிறேன். அவரை தேடித் தர வேண்டும் என்று மகேஸ்வரிகூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். இந் நிலையில் பொள்ளாச்சிஅருகே கோமங்கலம், கொடிமேடு என்ற இடத்தில் ஒரு உடல் கிடப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
இறந்து கிடந்த நபரின் உடல் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. மார்புப் பகுதியில்மொத்தம் 3 குண்டுகள் உடலில் பாய்ந்திருந்தன. கொல்லப்பட்டவர் செல்வக்குமார்என தெரிய வந்தது. இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்காகமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செல்வக்குமாரை கொன்றது யார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கினர். இதில்பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர்பரமசிவம் என்ற பந்தா பரமசிவம்.
இவர்தான் செல்வக்குமாரை தொலைபேசி மூலம் அழைத்தவர். அதன் பின்னர்பரமசிவம் தலைமையிலான கும்பல் செல்வக்குமாரை காரில் கடத்திச் சென்றது.
இவர்கள்தான் செல்வக்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பொள்ளாச்சி அருகேஉடலைப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். எதற்காக செல்வக்குமாரை இக்கும்பல்கொன்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இக்கும்பலைச் சேர்ந்த பரமசிவம், ஜான், ராஜ் பிரகாஷ் என்கிற கோல்டுவின், சுரேஷ்உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதில் ராஜ்பிரகாஷ் மேட்டுப்பாளையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரவியாபாரியைக் கடத்தி அவரிடமிருந்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில்தேடப்பட்டார். ஆனால், மும்பைக்குத் தப்பிச் சென்ற ராஜ்பிரகாஷ் இறந்து விட்டதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. ஆனால் உண்மையில் ராஜ் பிரகாஷ் சாகவில்லை.
போலீஸாரை திசை திருப்பவே இந்த நாடகத்தைப் போட்டுள்ளார் ராஜ் பிரகாஷ். இவர்பணத்துக்காக ஆளைக் கடத்தும் தாதா என்கிறார்கள்.
ராஜ்பிரகாஷின் ஒரு வீடு சென்னையில் உள்ளது. ஒரு வழக்கில் சிக்கியராஜ்பிரகாஷின் மனைவியை செல்வக்குமார்தான் போலீஸில் காட்டிக் கொடுத்தாராம்.அப்போது ராஜ்பிரகாஷ் வீடடை சோதனையிட்ட போலீஸார் அவரது வீட்டிலிருந்துதுப்பாகிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் செல்வக்குமார் மீது ராஜ்பிரகாஷ் காட்டமாக இருந்துள்ளார். இந்தக்கோபத்தில்தான் செல்வக்குமாரை அவர் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இக்கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மகேஸ்வரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தஅதே நேரத்தில், இன்னொரு தரப்பும் ஒரு புகாரைக் கொடுத்துள்ளது.
அதில், சரவணம்பட்டியைச் சேர்ந்த சிமென்ட் கடை உரிமையாளரான பரமசிவத்தைஒரு கும்பல் கடத்திச் சென்று பின்னர் விடுவித்து விட்டதாக அந்தப் புகாரில்கூறப்பட்டிருந்தது.
போலீஸைக் குழப்பவே இந்தப் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டது என விசாரணையில்தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications