கடலூர் அருகே ஸ்கூல் வேன் மீது லாரி மோதல்:6 குழந்தைகள் பலி- மேலும் பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே ஸ்கூல் வேன் மீது லாபி மோதியதில் அதில் சென்ற 6 குழந்தைகள் பலியாயினர். மேலும் 6குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
![]() |
நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குழந்தைகள் 40 பேருடன்அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது லாரி படு வேகத்தல் வந்து மோதியது.
இதில் அனைத்துக் குழந்தைகளுமே காயமடைந்தனர். 6 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 6பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்த குழந்தைகள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.













Click it and Unblock the Notifications