என்எல்சி பங்கு விற்பனை-அமைச்சரவை முடிவைஎதிர்க்காத தயாநிதி மாறன், ஏ.ராஜா
டெல்லி:
என்.எல்.சி, நால்கோ நிறுவனங்களின் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தைதனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தபோது அந்தத்தீர்மானத்திற்கு மத்திய திமுக அமைச்சர்கள் தயாநிதி மாறனும், ராஜாவும் ஆட்சேபனைதெரிவிக்கவில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது.
என்.எல்.சி, நால்கோ நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளை விற்க சமீபத்தில் கூடியமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு தமிழகத்தின்முக்கிய எதிர்க்கட்சியான அதிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடும எதிர்ப்புதெரிவித்தன.இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள இந்த முடிவுக்கு எப்படிஒப்புதல் தந்தார்கள் என்று அதிமுக பொதுச் சயலாளர் ஜெயலலிதா கேள்விஎழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, அமைச்சரவைக் கூட்டத்தில் திமுகவைச்சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டார்களா, இல்லையா என்பது குறித்து எனக்குத்தெரியாது என்றார்.
ஆனால் அமைச்சரவை கூடிய தினத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர்தயாநிதி மாறனும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவும் அதில் கலந்துகொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பங்கு விற்பனை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இருஅமைச்சர்களும் அதை ஆட்சேபிக்கவில்லை என்றும் தெரிகிறது.
ஆனால், இன்று பங்கு விற்பனையை எதிர்த்து கருணாநிதி எடுத்த முடிவைதயாநிதியே பிரதமரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
