மத்திய அரசிலிருந்து விலகுவோம்-கருணாநிதி
சென்னை:
நெய்வேலி நிலக்கரி மின் கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு வாபஸ்பெறாவிட்டால் மத்திய ஆட்சியில் இருந்து திமுக விலகும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான மத்திய அரசின் முடிவுக்குஎதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்பிரச்சினையில் தொழிலாளர்களுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிமுகஇதில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. இதனால் திமுக நெருக்கடிக்கு தள்ளப்படுள்ளது. காரணம், என்.எல்.சி.நிறுவன தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
விற்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ள 10 சதவீத பங்குகளையும் தொழிலாளர்களிடமே விற்கலாம் என்று முதலில்கருணாநிதி யோசனை தெரிவித்தார். இதை பிரதமரும் ஏற்று அவ்வாறு செய்யப்படும் என்றார். ஆனால்பங்குகளை வாங்க ரூ. 1,100 கோடி தேவைப்படும் என்பதால் கருணாநிதியின் யோசனைக்குதொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து உடனடியாக பங்கு விற்பனை முடிவை வாபஸ் பெறுமாறு பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கைவிடுத்தார். அந்தக் கோரிக்யைை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந் நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி,
தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, அந்தஅரசால் எடுக்கப்பட்ட முடிவுக்கு, அந்த அரசில் இருந்து கொண்டு, நாங்களும் பொறுப்பேற்க வேண்டுமா என்றுதிமுக யோசித்து வருகிறது.
பங்குகளை விற்கும் முடிவை ரத்து செய்யாவிட்டால் மத்திய அரசில் இருந்து திமுக விலக வேண்டி வரும். இதுதொடர்பாக திமுக மத்திய அமைச்சர்களை பிரதமருடன் பேசச் சொல்லிவிட்டேன்.
நெய்வேலி மின் கழக ஊழியர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு மதிப்பு தராமல் நடந்து கொள்வதுஏற்கத்தக்கதாக இல்லை என்றார்.
மத்திய அரசுக்கு தரும் ஆதரவு நீடிக்குமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய ஆட்சிக்கு வெளியில் இருந்துஆதரவு தருவோம் என்றார் கருணாநிதி. இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சரின் செயல்பாடும் திருப்தியாகஇல்லை என்றார்.
பிரதமரை சந்தித்த தயாநிதி:
இயைடுத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று பகலில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, கருணாநிதியின் முடிவைத் தெரிவித்தார். உடனடியாகபங்கு விற்பனை முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்தே பிரதமரின் அறிவிப்பு வெளியானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications