சரவணபவனில் வேலை செய்ய மறுத்தவர் வீடு சூறை
புதுக்கோட்டை:
சரவணபவன் ஹோட்டலில் வேலை செய்ய மறுத்து வேறு நிறுவனத்தில் வேலைக்கு சென்றவர் வீடு அடித்துநொறுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரபீக் (48). சிங்கப்பூரில்உள்ள சரவணபவன் ஹோட்டலில் இவருக்கு வேலை வாங்கித் தர, ஹோட்டல் ஊழியர் டேனியல் ஏற்பாடுசெய்தார்.சரவணபவன் நிர்வாகமே விசா எடுத்துக் கொடுத்தது. ஆனால், சிங்கப்பூருக்குச் சென்ற ரபீக்கோ வேறொருநிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இதனால் சரவண பவனுக்கு ரூ. 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், விசாவை திருப்பித் தர வேண்டும்.இல்லாவிட்டால் சரவண பவனிலேயே ரபீக் வேலைக்கு சேர வேண்டும் என்றும் வெட்டிவயிலில் உள்ள ரபீக்வீட்டுக்கு டேனியல் அடிக்கடி போன் செய்து மிரட்டிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு 10 மணிக்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரபீக் வீட்டு கதவை உடைத்தது. வீட்டுக்குள்நுழைந்து பொருட்களை அடித்து நெருக்கியது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த ரபீக்கின் அக்கா கணவர்சுபைர் அலியை அக்கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கியது.
அவர் போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியதால் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுபைர்அலி கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு காரணம் டேனியலாஎன்று விசாரணை நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications