விஸ்வரூபம் எடுக்கும் ஜனனி கள்ள நோட்டு:சிக்கப் போகும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்!
மதுரை:
ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்ததாக கிளம்பியுள்ள புது சர்ச்சை விஸ்வரூபம்எடுக்கிறது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலரும் இந்த வழக்கில் சிக்குவர் எனத் தெரிகிறது.
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜனனியிடமிருந்து ரூ. 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயையும்போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி ஒன்றில் டெபாசிட்செய்யப்பட்டது.கஞ்சா வழக்கிலிருந்து ஜனனி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டபோது, இந்தப் பணத்தை ஜனனி மற்றும்கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவிடம் ஒப்படைக்க மதுரை போதைப் பொருள் குற்றத் தடுப்பு நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதையடுத்து இந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து வருமான வரித்துறை கொடுத்த புகாரின் பேரில் மதுரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் ஜனனி, தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ், ஜெகதீஷ் ராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வெளியில் புழக்கத்தில் விடப்படாத நிலையில் எப்படி அதில் கள்ள நோட்டுவந்தது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கள்ள நோட்டாக கருதப்படும் 1000 ரூபாய் கட்டுக்களில் உள்ளஎண்கள் கொண்ட பணம் தற்போது மும்பை ரிசர்வ் வங்கியில் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
அப்படி இருக்கையில ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் எப்படி இந்த எண்கள் இடம் பெற்றனஎன்பது பெரும் புதிராக உள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு பணத்தை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், ரிசர்வ் வங்கிஅதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன்தான் இந்த எண்கள் கள்ள நோட்டுக் கும்பலுக்குக் கை மாறியிருக்கும்என்றும் போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
இந்த வழக்கில் நாடு முழுவதும் பல்வேறு கும்பல்கள் சம்பந்தப்படடிருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார்கருதுவதால் விரைவில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஜனனிக்கு இந்த கள்ள நோட்டு அவருக்கு வேண்டப்பட்ட நடனராஜர் மூலமாக வந்ததாக முன்பு குற்றம்சாட்டப்பட்டது. அந்த நடனராஜருக்கு உ.பி. மாஜி முதல்வர் மூலமாக வந்தாகவும் பேச்சு உள்ளது.
கள்ள நோட்டு கும்பலுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது மண்டை காய வைத்து வருகிறது.
இதற்கிடையே முன் ஜாமீன் கோரி ஜனனி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications
