தேமுதிக பெரிய கட்சியா? கருணாநிதி கோபம்
சென்னை:
காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றதைமிகப் பெரிய அளவில் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது விஷமத்தனமானதுஎன்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மற்றும் கண்ணனின் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்குபடுதோல்வி கிடைத்துள்ளது.இவ் வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதைபெரிதாக பேசுகிறார்கள். அந்தக் கட்சிக்கு 2 வார்டுகளில் மட்டுமே அங்கு வெற்றிகிடைத்துள்ளதை எழுதாமல் விட்டு விட்டார்கள்.
தேமுதிக வெற்றியால், தமிழக அரசியலிலும் திருப்பம் வரப் போகிறது என்ற ரீதியில்,பெரிதாக எழுதித் தள்ளியுள்ளனர். விஷமத்தனமான பிரசாரம்தான் இது.
காரைக்கால் நகராட்சித் தலைவராக தேமுதிக சார்பில் வெற்றி பெற்றுள்ளபெண்மணியே, தனக்கு காங்கிரஸில் டிக்கெட் கிடைக்காத காரணத்தால்தான் தேமுதிகசார்பில் நின்று வென்றதாக கூறியுள்ளதை யாரும் பெரிதாக எழுதவில்லை.
2 வார்டில் மட்டும் வெற்றி பெற்று, தலைவர் பதவியில் அமர்ந்து விட்டால் அக்கட்சிபெரிய கட்சியா? அது பெரிய வெற்றியா?
காரைக்காலில் 7 வார்டுகளில் காங்கிரஸும், 5 வார்டுகளிலும் காங்கிரஸும் வெற்றிபெற்றுள்ளதை ஒரு செய்தித்தாளும் வெளியிடவில்லை.
மொத்தத்தில் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்திகளைமொத்தமாக இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.
புதுச்சேரி நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் 4 இடங்களில்மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
உழவர்கரை நகராட்சியில், 37 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் மட்டுமேஅதிமுகவால் வெல்ல முடிந்துள்ளது.
மொத்தம் உள்ள 5 நகராட்சிகளில் 122 வார்டுகள் உள்ளன. இதில் 116 வார்டுகளில்அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. கொம்யூன்கள் என அழைக்கப்படும்பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 98 இடங்களில் திமுக அணிக்கு 59இடங்களிலும், அதிமுகவுக்கு 10 இடங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது.
இத்தேர்தலில் திமுக அணிக்கு எத்தகைய வெற்றி கிடைத்துள்ளது என்பதைஇதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். இந்த வெற்றி தொடரும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications