ஏவுகனை சோதனை பெரும் வெற்றி-வட கொரியா
சியோல்:
தான் நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியாதெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை தாக்கக் கூடிய திறமை படைத்தடேபோடாங்-2 என்ற நீண்ட தொலைவு ஏவுகனை மற்றும் 9 நடுத்தர ரகஏவுகணைகளை வட கொரியா ஏவி சோதனை நடத்தியது.சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த ஏவுகனை சோதனைகளை வடகொரியா நடத்தியது. வட கொரியாவின் இந்த ஏவுகனை அமெரிக்காவுக்கு கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவுக்கு அருகில் உள்ள ஜப்பானும் இதை கண்டித்துள்ளது. இந்தஏவுகனைச் சோதனை மூலம் எங்களை கோபப்படுத்த வட கொரியா யலுகிறது.எங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கநேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் அமெரிக்காஅறிவித்தது.
ஆனால் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக வட கொரியா அறிவித்துள்ளதாகதென் கொரிய செய்தி நிறுவனமான யோன்காப் தெரிவித்துள்ளது.
ரைஸ் எச்சரிக்கை:
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில்,
வட கொரியாவின் ஏவுகணைச் சோதனையைப் பார்த்து சர்வதேச சமுதாயம் பயந்துவிடாது. வட கொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன.
வட கொரியாவின் மிரட்டல்களை சமாளிக்க எங்களிடம் பல வகையான அஸ்திரங்கள்உள்ளன. உலக சமுதாயம் நம்மை ஒன்றும் செய்யாது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டது வட கொரியா.
ஆனால் வட கொரியாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகக் கடுமையாக உள்ளது என்றார்.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் கிறிஸ்டோபர் ஹில், வடகொரிய விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஆசிய சுற்றுப்பயணத்தைத்தொடங்கியுள்ளார்.
தென் கொரியாவின் குழப்பம்:
இந் நிலையில், வட கொரியாவின் ஏவுகனைச் சோதனை குறித்து எப்படி ரியாக்ட்செய்வது என்பது குறித்து பரிந்துரைக்குமாறு அந்நாட்டு உளவுத்துறை மூத்த அதிகாரிமற்றும் 3 அமைச்சர்களை அந்நாட்டு பாராளுமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, வட கொரியாயை தென் கொரியா உறுதியாக கண்டிக்கவில்லை என்றுஅமெரிக்கா புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சியான யூரி கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான கிராண்ட் நேஷனல் கட்சிமற்றும் தென் கொரிய பத்திரிகைகள், தென் கொரிய அதிபர் ஹியூனுக்குக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் ஏவுகனைச் சோதனையை தடுத்துநிறுத்த அவர் தவறி விட்டதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கிடையே, நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால், வட கொரியாவுடன் செய்துகொண்ட மனிதாபிமான உதவிகளுக்கான ஒப்பந்தத்தை தென்கொரியா ரத்து செய்யக்கூடும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கூடும் என்று தெரிகிறது.
இந் நிலையில் வட கொரிய ஏவுகணை சோதனை குறித்து இன்றும் ஐ.நா. பாதுகாப்புசபை தொடர்ந்து விவாதிக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications