நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் சிறைச் சாலையில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நளினி மற்றும் முருகனை சென்னை மத்திய சிறை அதிகாரிகள்சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணட தண்டனை விதிக்கப்பட்ட முருகனும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினியும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மகள் அரித்ரா இலங்கையில் உள்ளார்.தமிழகத்தில் மேல் படிப்பு படிப்பதற்காக அரித்ரா தமிழகம் வர விரும்புகிறார்.இதற்கான கல்வி விசா கோரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில்விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முருகனும், நளினியும் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 10 நாட்களாக இருவரும்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் வேலூர் சிறை அதிகாரிகள்பலமுறை பேச்சு நடத்தியும் போராட்டத்தை இருவரும் கைவிடாமல் உள்ளனர்.
இந் நிலையில், சென்னை மத்திய சிறையிலிருந்து அதிகாரிகள் குழு வேலூர் சென்றுஇருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. போராட்டததைக் கைவிடுமாறு அவர்கள்கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்க முருகனும், நளினியும் மறுத்து விட்டனர்.இருவரும் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications