தமிழகத்தில் ஆங்காங்கே கரண்ட் கட்!
சென்னை:
என்.எல்.சி. ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக, சென்னை உள்பட தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால்நிலைமை மோசமாகும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பதை எதிர்த்து என்.எல்.சி. ஊழியர்கள் 36,000க்கும் மேற்பட்டோர்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம்எதிரொலியாக தமிழகத்தில் மின் வினியோகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சென்னையில் மைலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் புதன்கிழமை பலமுறைமின்சார வினியோகம் இல்லை. இதே போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம்அடிக்கடி கட் ஆகி மக்களை அவஸ்தைக்குள்ளாக்கியது.
என்.எல்.சி. முழுமையாக இயங்கியபோது அங்கிருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு1000 மெகாவாட் மின்சாரம கிடைத்தது. தற்போது இது சுத்தமாக நின்று விட்டது.
இருப்பினும் நீர் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கூடுதல்மின்சாரத்தை மின்வாரியம் பெற்று வருகிறது. தனியார் மின் உற்பத்திநிலையங்களிடமிருந்தும் கூடுதல் மின்சாரம் பெறப்படுவதாக மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
நெய்வேலியில் தினசரி 2,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது வெறும் 160 மெகாவாட் மின்சாரம் மட்டுமே என்.எல்.சி.யில்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
2,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 60,000 டன் பழுப்புநிலக்கரி தேவைப்படும். முதல் அனல் மின் நிலையத்திற்கு 15,000 டன்னும், 2வதுநிலையத்திற்கு 35,000 டன்னும், 3வது நிலைய விரிவாக்கப் பிரிவுக்கு 10,000டன்னும் நிலக்கரி தேவைப்படும்.
தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப்போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 36,000 பேரின் சம்பளத்தை போராட்டகாலத்தில் கட் செய்தால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 80 லட்சம் மிச்சமாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications