கருணாநிதி மிரட்டலுக்குப் பணிந்தார் பிரதமர்!என்.எல்.சி. பங்குகள் விற்கும் முடிவு நிறுத்தம்!!
டெல்லி:
என்.எல்.சி மற்றும் தேசிய அலுமினியம் கழகத்தின் (நால்கோ) பஙகுகளைத் தனியாருக்கும் விற்கும் முடிவுநிறுத்தி வைக்கப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
என்.எல்.சி மற்றும் நால்கோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க சமீபத்தில் கூடிய மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதறகு என்.எல்.சி தொழிலாளர்கள் கடும் கணடனம்தெரிவித்தனர்.திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் என்.எல்.சி.தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு முதல்வர் கருணாநிதி பிரதமருக்குக் கோரிக்கைவிடுத்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்தால்ஆட்சியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்.
தனது முடிவை பிரதமரிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் அவர் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துப் பேசினார்.
இதையடுதது பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுபேசினார்.
இதையடுத்து பிரதமர் அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி என்.எல்.சி, நால்கோ நிறுவனப்பங்குகளை விற்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த முடிவை இடது சாரிக் கட்சிகள வரவேற்றுள்ளன. கருணாநிதி கொடுத்த அதிர்ச்சிவைத்தியத்தைத் தொடர்ந்து பிரதமர் தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர்கள் அவசர ஆலோசனை:
இதையடுத்து என்எல்சி தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்வாபஸாகும் என்று தெரிகிறது.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துத்தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுளளது. இக் கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை வாபஸ்பெறுவது குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர். அனேகமாக போராட்டம் வாபஸாகலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications