ஸ்டெபானி மரணம்: மாணவருக்கு 2 ஆண்டு சிறை!
சென்னை:
நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவி ஸ்டெபானியை முழு போதையில் காரில் துரத்திச்சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி அ"தப் பெண் பலியான வழக்கில், கல்லூரி மாணவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்டெபானி கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நள்ளிரவில் ஒரு பாருக்குச்சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அதே பாரில் மது அருந்திய கல்லூரி மாணவர் வெங்கடேஷ், ராஜா,நெஸ்லே மற்றும் டென்வர் (வயது 14) ஆகியோர் தங்களது காரில் ஸ்டெபானியை துரத்திச் சென்றனர்.இதில் ஸ்டெபானி நிலை குலைந்து சாலைத் தடுப்பில் மோதி பலியானார். இந்த சம்பவம் சென்னையைஉலுக்கியது.
இச் சம்பவத்திற்குப் பிறகுதான் 18 வயதுக்கு உட்பட்டவர்களை ஹோட்டல்களில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது, 10 மணிக்கு மேல் ஹோட்டல் பார்களை திறந்து வைக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறைஉத்தரவிட்டது.
ஸ்டெபானி இறந்தது தொடர்பாக நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சென்னை 4வது விரைவுநீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இன்று நீதிபதி ராஜா சொக்கலிங்கம் தீர்ப்பு வழங்கினார். தனது தீர்ப்பில், ஸ்டெபானி விபத்தில் தான் இறந்தார்என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு வெங்கடேஷ்தான் முக்கியக் காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே வெங்கடேஷுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
நெஸ்லே, ராஜா ஆகியோர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.
டென்வர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதால் அவர் சம்பந்தமான வழக்கு சிறுவர் நீதிமன்றத்திற்குஏற்கனவே மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications