பெற்றோரை தேடும் பெல்ஜியம் முத்துலட்சுமி!
கோவை:
ஐந்து வயது சிறுமியாக பெல்ஜியத்துக்கு சென்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனதுபெற்றோரைத் தேடி தமிழகம் வந்துள்ளார் முத்துலட்சுமி என்ற இளம் பெண்.
மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், பஞ்சவர்ணம் தம்பதிக்குமல்லிகா, மணி, முத்துலட்சுமி ஆகிய மூன்று குழந்தைகள். இவர்களில் முத்துலட்சுமி 5வயது குழந்தையாக இருந்த போது இவரது பெற்றோர் நெல்லை மாவட்டம்அம்பாசத்திரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.அப்போது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெமிலி பன்ஜியன்ஸ் என்பவர்குடும்பத்துடன் தமிழகத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். பெல்ஜியம் அரசு நிறுவனத்தில்பொறியாளராக வேலை பார்க்கிறார் பெமிலி.
அம்பாசத்திரம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுமி முத்துலட்சுமியைமுறைப்படி தத்தெடுத்தார். பின்னர் ஜோஸ்பின் என்ற பெயர் மாற்றத்துடன் வளர்ப்புபெற்றோருடன் பெல்ஜியம் போனார் முத்துலட்சுமி.
வளர்ந்து ஆளான முத்துலட்சுமி, பொறியாளர் கிம் ஸ்மித்தை 7 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் செய்தார். இவர்களுக்கு ஜூலி (6), பீட்டர் (4), ராணி (2) என மூன்றுகுழந்தைகளும் பிறந்தனர்.
தனது உண்மையான பெற்றோர் இந்தியாவில் இருப்பதை அறிந்த முத்துலட்சுமிக்குஅவர்களைப் பார்க்க ஆசை ஏற்பட்டது. இந்தியா சென்று அவர்களைப் பார்க்கஆவலாக இருந்து வந்தார்.
ஆனால் அதற்கான வாய்ப்புதான் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில்,எப்படியாவது பெற்றோரை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் பெல்ஜியத்தில்இருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த வாரம் சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்து தனது குடும்பத்தினர் குறித்து அவர் விசாரித்தபோது, கோவையில்அண்ணன் மணியுடன் பெற்றோர் இருப்பதாக தகவல் கிடைத்து மகிழ்ந்தார்.உடனடியாக கணவர், குழந்தைகளுடன் கோவைக்கு விரைந்தார்.
மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்தார். அதில்,கேரள மூங்கில் தொழிற்சாலையில் என் தந்தை வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு இப்போது 80 வயது இருக்கும். கோவையில் வியாபாரம் செய்துவரும் என்அண்ணன் மணியுடன் எனது பெற்றோர் தங்கியிருக்கிறர்கள் என்று கேள்விப்பட்டேன்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் எனது சகோதரி வசிக்கிறார் என்றும் கூறினார்கள்.எனவே எனது பெற்றோரை கண்டுபிடித்து கொடுங்கள் என்றும் கேள்விப்பட்டேன்.அவர்களை நான் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்த முத்துலட்சுமி,தனது 5 வயது புகைப்படத்தையும் கொடுத்துள்ளார்.
கோவை ஆணையரின் உத்தரவின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் முத்துலட்சுமியின்குடும்பம் குறித்து விசாரித்து வருகின்றனர். முத்துலட்சியும் தனது பெற்றோரைக் காணஆவலோடு கோவையில் தங்கியுள்ளார்.
என் குழந்தைகளை பார்த்தால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.அவர்களுக்கு என் குழந்தைகளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அந்தவாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
முத்துலட்சுமிக்கு தமிழில் அம்மா, அப்பா என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமேதெரியுமாம்.
தனது பெற்றோர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் காந்திபுரம்ராம்நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் தொலைபேசி எண்ணான 0422-2230276,2230279 அல்லது வேன் டிரைவர் மகேஷின் மொபைல் எண் 94447-53577ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி கோரியுள்ளார்முத்துலட்சுமி.
கோவையில் இன்னும் ஒரு வாரம் காத்திருந்துவிட்டு. அதன்பிறகு கேரளாவில் தனதுசகோதரியைத் தேடிப்பார்க்க இருப்பதாக முத்துலட்சுமி கூறினார்.
கடல் கடந்து சென்றும், மண் மனம் மாறாமல் தாயகம் தேடி வந்துள்ளமுத்துலட்சுமியின் முயற்சிகள் வெல்லட்டும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications