டாவின்சி கோட் தடை நீக்கம்: அரசுக்கு அபராதம்!
சென்னை:
தி டாவின்சி கோட் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. மேலும், கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்கும் வகையில்நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரூ. 1000 அபராதமும் விதித்தது.
தி டாவின்சி கோட் படம் சமீபத்தில் உலகெங்கும் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில்இயேசு நாதர் குறித்த தவறான தகவல்கள் இருப்பதாக கூறி இந்தியாவில் இப்படத்தைதிரையிட கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இருப்பினும் தணிக்கை வாரியம், படத்திற்கு சான்றிதழ் கொடுத்தது. மேலும்,உச்சநீதிமன்றமும் படத்தைத் திரையிடலாம் என அனுமதி அளித்தது.
இருப்பினும் தமிழகத்தில் இப்படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விடுத்த ஒரு அறிக்கையில்,இப்படத்தைத் திரையிடுவதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்றசூழ்நிலை உள்ளதால், இப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது என்றுதெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னையில் இப்படம் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது.இதை எதிர்த்து படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருந்த சோனி பிக்சர்ஸ்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், முழுக்க முழுக்க கற்பனையில்உருவாக்கப்பட்டதாக இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில்,இப்படத்தை தடை செய்திருப்பது தேவையில்லாதது.
தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் கொடுத்துள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தலைவர்களும் படத்தைப் பார்த்துள்ளனர், ஆட்சேபனை எதையும் அவர்கள்தெரிவிக்கவில்லை.
இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் தமிழக அரசு இப்படத்தைத தடைசெய்திருப்பது தவறான நடவடிக்கை. படத்தைத் தடை செய்ய அவர்களுக்கு உரிமைஇல்லை.
கற்பனைச் சம்பவங்கள் இடம்பெற்றுள இந்தப் படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைஏற்படும் என அரசு கற்பனை செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை சமாளிக்க வேண்டிய பொறுப்பு மாநிலஅரசுக்கு உண்டு. அதிலிருந்து தப்பும் வகையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும்வகையில், படத்தையே தடை செய்வது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
தமிழக அரசு விதித்துள்ள தடை, மனுதாரரின் கருத்துச் சுதந்திரத்தை அப்படடமாகநசுக்கும் வகையில் உள்ளது தெளிவாகிறது.
ஒருவரது கருத்துக்கு எதிராக குறிப்பிட்ட சமுதாயம் வன்முறையை பரப்பவோ,சட்டவிரோதமாக மிரட்டவோ முயன்றால் அவர்களைத் தடுப்பதுதான் அரசின் கடமை.
மாறாக, அவர்களை சமாதானப்படுத்தவோ, அவர்களை பகைத்துக் கொள்ளாமல்நடந்து கொள்ளவோ முயலக் கூடாது.
மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
கலைஞர்களின கருத்துச் சுதந்திரத்தை அரசு தடுக்க முடியாது. இது ஆரோக்கியமானநடவடிக்கை அல்ல. எனவே தி டாவின்சி கோட் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டதடை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் தமிழக அரசு ரூ. 1000 அபராதமும் செலுத்த வேண்டும். இந்தத் தொகைமனுதாரரின் வழக்கு செலவுக்காக அவர்களிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றுநீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து டாவின்சி கோட் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு இருந்ததடை நீங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications