உழவர் பாதுகாப்புத் திட்டம் ரத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் பாதுகாப்புத் திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விவசாயிகள் அடையாளஅட்டைக்குப் பதில் புதிய நிரந்தர அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நடந்தது.இதில், கடந்த திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த விவசாயத்தொழிலாளர் நலவாரியம் கடந்த அதிமுக ஆட்சியல் முடக்கப்பட்டு விட்டது.

அந்த வாரியத்தை மீண்டும் அமைத்து, அதன் மூலம் தமிழ்நாடு விவசாயத்தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை அமல்படுத்தஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் பாதுகாப்புத்திட்டத்தை ரத்து செய்வது எனவும், அத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவசாயத்தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகளை வாபஸ் பெறுவது எனவும்,அதற்குப் பதில் புதிய நிரந்தரஅடையாள அட்டைகளை வழங்க முடிவுஎடுக்கப்பட்டது.

இந்த அடையாள அட்டைகளில் முதல்வரின் படம் இடம்பெறாது.

இந்தத் திட்டத்தில் சேருவதற்கு விவசாயிகள் பதிவுக் கட்டணமோ, புதுப்பித்தல்கட்டணமோ செலுத்தத் தேவையில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை விரைவாகவும், முறையாகவும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்படும்.

அரசுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலம், தோட்டக்கலைச் சங்கம் என்ற பெயரில்,அரசிடமிருந்து பெற்று, அதனை பெற்ற நோக்கத்திற்கப் பயன்படுத்தாமல் சொந்தலாபத்திற்காகப் பயன்படுத்தி வந்த காரணத்தால் 1989ம் ஆண்டு திமுக அரசு பொதுநோக்கத்தின் அடிப்படையில், அதனை கையகப்படுத்தி, தோட்டக்கலைத்துறையிடம்ஒப்படைத்தது.

அதனை எதிர்த்து தோட்டக்கலைச் சங்கம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துதனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றது. இதை எதிர்த்து தமிழக அரசுஉயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இதை கடந்த அதிமுக ஆட்சியில் திரும்பப் பெற்று விட்டனர்.

இந்த நிலையில், அந்த இடத்தை மீண்டும் தோட்டக்கலைச் சங்கத்திற்கே வழங்கலாம்என்று கடந்த ஆட்சியில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை ரத்து செய்து, உயர்நீதிமன்றத்தில் மீணடும் மேல் முறையீட்டு வழக்கைதொடர தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றமுடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட தோட்டக்கலைச் சங்கத்தை நிர்வகித்து வருபவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. இவர் வழக்கறிஞர் விருத்தாச்சல ரெட்டியாரின் மகன் ஆவார்.ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை இவர்தான் நிர்வகித்துவந்தார்.

அந்த சமயத்தில், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிசசிகலாவின் உறவினர் இளவரசியின் கணவர் ஜெயராமன் பலியானார். அதன் பின்னர்மீனா அட்வர்டைசிங் என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இந்த நிறுவனம் மூலமாகத்தான் தமிழக அரசின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.இதனால் செம காசு பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் அரசு அனுமதிபெறாமல் நூற்றுக்கணக்கான விளம்பரப் பலகைகளை வைத்து பணம் சம்பாதித்தார்என்றும் இவர் மீது புகார் உள்ளது.

இவர்தான் அரசு நிலத்தை வாங்கி தோட்டக்கலை சங்கத்தை உருவாக்கி நடத்திவந்தார். முதலில் கதீட்ரல் சாலையில் சங்க அலுவலகத்தை அமைத்த அவர் பின்னர்மாதவரத்திற்கு அதை மாற்றினார்.

அங்கு அலுவகத்தைச் சுற்றியுள்ள இடங்களை திரைப்பட படப்பிடிப்புக்கு விட்டுநல்ல தொகையைப் பார்த்து வந்தார் என்று கிருஷ்ணமூர்த்தி மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலத்தைத்தான் தற்போது அரசு மீண்டும் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+