2 குழந்தைகளின் தாய்க்கு செக்ஸ் தொல்லை; வக்கீல் மீது டிஜிபியிடம் புகார்!
சென்னை:
2 குழந்தைகளுக்குத் தாயான பெண்ணை தனது செக்ஸ் ஆசைக்கு இணங்குமாறு கூறிஅடியாட்களை வைத்து மிரட்டி வரும் வழக்கறிஞர் குறித்து அப்பெண் டிஜிபியிடம்புகார் கொடுத்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர 6வது தெருவைச் சேர்ந்தவர் மாரிராஜ்.ஜவுளி வியாபாரம் செய்யும் இவர் அடிக்கடி துணிகள் வாங்குவதற்காக சிங்கப்பூர்போய் விடுவாராம். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு இரண்டுகுழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் நாகலட்சுமி வழக்கறிஞர் சரசமுத்து என்பவர் குறித்து தமிழகடிஜிபியிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது வீட்டுக்குப் பக்கத்து தெருவில் வசிப்பவர்செந்தில் வடிவேல். அவர்கள் குடும்பத்திற்கும், எங்களது குடும்பத்திற்கும் கடந்த 15வருடமாக நல்ல நட்பு உள்ளது.
அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவர்களுக்கு உதவிகள் செய்வேன்.அப்போது செந்தில் வடிவேலின் மகன் சரசமுத்து கல்லூரியில் படித்து வந்தார். அவர்எனது அழகில் மயங்கினார்.
ஆனால் என்னிடம் அதுகுறித்து எதுவும் சொன்னதில்லை. இப்போது அவர்வழக்கறிஞராக இருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் உடல் நலம்சரியில்லாமல் இருந்தார்.
இதனால் நான் அவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். அப்போது ஒரு நாள்சரசமுத்து என்னிடம் வந்து, நீ எனக்கு வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது. உன்னை என்னால் மறக்க முடியவில்லை என்றார்.
இதனால் அதிர்ந்து போன நான், எனக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளன.இப்படியெல்லாம் பேசாதே என்று திட்டி விட்டேன்.
ஆனாலும் அவர் விடவில்லை. தொடர்ந்து என்னை அவரது ஆசைக்கு இணங்குமாறுவற்புறுத்தி வந்தார். அடியாட்களுடன் அவ்வப்போது வந்து இப்போது மிரட்டஆரம்பித்துள்ளார்.
எனது கணவர் அடிக்கடி சிங்கப்பூர் போய் விடுவதால் நான் தனிமையில் இருக்கும்நேரங்களில் வீட்டில் இருக்கமே பயமாக உள்ளது. போனிலும் ஆபாசமாக பேசுகிறார்.இந்தத் தொலை காரணமாக நான் செல்போன் சிம் கார்டை 10க்கும் மேற்பட்ட முறைமாற்றி விட்டேன்.
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். அவர் மீது பார் கவுன்சில், மனிதஉரிமை ஆணையம் ஆகியவற்றிலும் புகார் கொடுத்தேன். சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் புகார் கொடுத்து விட்டு வரும்போது என் மீது அவரது அடியாட்கள்முட்டையை வீசி ரகளை செய்தனர்.
அவர் வக்கீல் என்பதால் வண்ணாரப்பேடடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும்நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இதனால்தான் டிஜிபியிடம் புகார் செய்துள்ளேன்என்று கூறியுள்ளார் நாகலட்சுமி.












Click it and Unblock the Notifications