ராஜினாமா செய்ய முன்வந்த மன்மோகன்சிங்
டெல்லி:
என்.எல்.சி, நால்கோ நிறுவனங்களின் பங்கு விலக்கல் தொடர்பாக எழுந்தசர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங்முன்வந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமரசப்படுத்தியதால் தனது முடிவைமன்மோகன் சிங் கைவிட்டதாக கூறப்படுகிறது.என்.எல்.சி. மற்றும் தேசிய அலுமினியம் கழக (நால்கோ) நிறுவனங்களின் 10 சதவீதபங்குகளை தனியாருக்கு விற்க சமீபத்தில் மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளித்த திமுக, வெளியில் தனதுநிலையை மாற்றிக் கொண்டது.
என்.எல்.சி. ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்ததாலும், இடதுசாரிகள்,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்ததாலும், தனது பெயர் கெட்டு விடக் கூடாதே என்பதற்காக திமுக, மத்தியஅரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
உடனடியாக இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். இருப்பினும் பிரதமர் தரப்பிலிருந்துஎந்தப் பதிலும் வராததால், கோபமடைந்த அவர் மத்திய அரசிலிருந்து விலகுவோம்என்று தடாலடியாக அறிவித்தார்.
கருணாநிதியின் இந்த முடிவை, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பிரதமரிடம்நேரில் சென்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமருடன்அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசின் முடிவை கைவிடச் சொல்லிவற்புறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து என்.எல்.சி, நால்கோ நிறுவன பங்கு விலக்கல் தொடர்பானஅனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம்அறிவித்தது.
முதல்வர் கருணாநதி கொடுத்த நெருக்கடி மன்மோகன் சிங்கை கடுமையானஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை முடிவை மாற்றுவதற்கு இப்படி மிரட்டல் அஸ்திரத்தைக்கூட்டணிக் கட்சிகள் பயன்படுத்துவதை அவர் விரும்பவில்லை. எனவே தான்பதவியிலிருந்து விலக விருப்பம் கொண்டுள்ளதாக அவர் சோனியா காந்தியிடம்தெரிவித்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் கட்சியின ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் இல்லத்தில்நடந்தது. அதற்கு முன்பாக சோனியா காந்தியுடன் பேச வேண்டும் என்று பிரதமர்விரும்பியதால் கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பே பிரதமர் இல்லம் வந்தார்சோனியா.
பின்னர் மன்மோகன் சிங்குடன் அவர் தனி அறையில் ஆலோசனை நடத்தினார்.அப்போது தனது மனக்குமுறலை மன்மோகன் கொட்டியாதக கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து இதுபோல நெருக்கடி கொடுப்பதும்,அமைச்சரவையின் முடிவையே தள்ளிப்போடும் அளவுக்கு சில கட்சிகள் கடும்நெருக்கடியைக் கொடுப்பதையும் தான் விரும்பவில்லை.
இது எனக்கு சந்தோஷம் தரவில்லை. எனது பதவியில் நான் நீடிக்க வேண்டுமா என்றஎண்ணம் எனக்குள் வந்துள்ளது என்று சோனியாவிடம் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் இதுபோன்ற நெருக்கடிகள், பொருளாதார சீர்திருத்தநடவடிக்கைகளை முற்றிலும் முடக்கிப் போட்டு விடும் என்றும் சோனியாவிடம்,மன்மோகன் சிங் குறியதாகத் தெரிகிறது.
மேலும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் சோனியாவிடம்,மன்மோகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மன்மோகனை சமதானப்படுத்திய சோனியா காந்தி, பங்கு விலக்கல் தொடர்பானபிரதமரின் முடிவில் எந்தத் தவறும் இல்லை, காங்கிரஸ் கட்சி பிரதமரின் முடிவைமுழுமையாக ஆதரிகிக்கிறது.
இருப்பினும் தற்போதைய நிலையில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியநிலை உள்ளதால் என்.எல்.சி விவகாரத்தில் அரசு சற்று இறங்கிப் போக வேண்டியநிலை ஏற்பட்டு விட்டதாக பிரதமரிடம் சோனியா காந்தி விளக்கியுள்ளார்.
இந்த விஷயம் தவிர, தன்னை பலவீனமான பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம்செய்வதையும் சோனியாவிடம், மன்மோகன் சிங் சுட்டிக் காட்டியுள்ளார். இதுபோன்றபிரசாரங்கள், அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நல்லதல்ல என்றும் அவர்விளக்கியுள்ளார்.
அவரை சோனியா காந்தி மிகுந்த சிரமப்பட்டு சமாதானப்படுத்தினார் என்றுகூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
இதில், மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி,சிவராஜ் பாட்டில், காரியக் கமிட்டி உறுப்பினர் ஏ.கே.அந்தோணி, அகமது படேல்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழக்கமான கூட்டமாக இது கருதப்பட்டாலும் கூட பங்கு விலக்கல் தொடர்பாகத்தான்முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்று பாஜக கூறுவது பொய்யானது,அடிப்படையில்லாதது. உண்மையில், வாஜ்பாய்தான் பலவீனமான பிரதமராகதிகழ்ந்தார். இதை நாடறியும்.
ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும், லட்சியங்களையும் செயல்வடிவில் கொண்டுவந்து அதை நிறைவேற்ற பாடுபடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவர் மீதுஇவ்வாறு அவதூறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போது மத்தியில் ஒரு கட்சி ஆட்சி நடக்கவில்லை. மாறாக, பல கட்சிகளைக்கொண்ட கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் கட்சி,கூட்டணிக் கட்சிகளின் கருத்தையும் ஏற்க வேண்டும், மதிக்க வேண்டும்.
அதுதான் பங்கு விலக்கல் விவகாரத்திலும் நடந்துள்ளது. இதை வைத்து பிரதமர் வீக்ஆனவர் என்று கூறுவது தவறு என்றார் ஜெயந்தி நடராஜன்.
பிரமதர் ராஜினாமா செய்யப் போகிறார் என்று வெளியான தகவலால் தலைநகர்டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் பிரதமரின் செயலாளர் சஞ்சய்பாரூ இதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
பிரதமர் ராஜினாமா செய்யவில்லை, அப்படி வெளியான தகவல்களில் உண்மைஇல்லை, அது வெறும் வதந்தியே என்று பாரூ கூறியுள்ளார்.
ஆனால், பங்கு விலக்கல் விவகாரத்தில் மன்மாகன் சிங் கடுமையான அப்செட்டில்உள்ளார் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications