நடிகர் சங்கத் தலைவர் தேர்தல்: சரத்-நாசர் மோதல்
சென்னை:
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் வேட்பு மனு தாக்கல்செய்தார்.கடைசி நேரத்தில் நடிகர் நாசரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முநடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. தலைவர்பதவிக்கு சரத்குமார் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்யவெள்ளிக்கிழமைதான் கடைசி நாள்.இதையடுத்து நடிகர் சரத்குமார் சங்கத்திற்கு வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அவரது மனுவை வழிமொழிந்து தற்போதைய தலைவர் விஜயகாந்த் கடிதம்அனுப்பியிருந்தார்.
சரத்குமார் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு மனோரமா, விஜயக்குமார்ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்குகே.என்.காளையும் போட்டியிடுகிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சிலம்பரசன், பிரஷாந்த், சத்யராஜ், முரளி,அப்பாஸ், செந்தில், பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், அலெக்ஸ், குண்டு கல்யாணம்,செல்வராஜ், வீரமணி, பசி சத்யா, ஸ்ரீபிரியா, விந்தியா, மும்தாஜ் உள்ளிட்ட 24 பேர்போட்டியிடுகிறார்கள்.
இவர்களது எதிரணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.வி.சேகரும்,பொருளாளர் பதவிக்கு நல்லதம்பியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் நடிகர் நாசர் சார்பில்திடீரென வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நடிகர், நடிகைளிடையேபரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாசர் சார்பில் அவரது மனைவி கமீலா நாசர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்வில் அரசியல் இருக்கக் கூடாது, அரசியல்சம்பந்தப்படட்வர்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நாசர்வற்புறுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த்துடன் நேருக்கு நேர்விவாதம் செய்தார். இதனால் அவரை தலைவர் தேர்தலில் நிற்க ஒரு பிரிவு கூறிவந்தது. ஆனால் அதை நாசர் ஏற்காமல் இருந்தார்.
இந்த நிலையில் திடீரென நாசர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாசருக்கு சிலமுன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேபோட்டியில்லாமல் சரத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்இப்போது போட்டி உருவாகியுள்ளதால் தேர்தலில் விறுவிறுப்பு கூடியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications