சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைகிறது கோவை!
சேலம்:
பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் கோவை, ஈரோடு போன்ற ஊர்கள்,புதிதாக உருவாக்கப்படவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணையவுள்ளன.
தென்னக ரயில்வேயின் கீழ் இப்போது சென்னை, மதுரை, திருச்சி, பாலக்காடு மற்றும்திருவனந்தபுரம் ஆகிய ஐந்து ரயில்வே கோட்டங்கள் உள்ளன.தற்போது சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கோட்டத்தின் கீழ் எந்தெந்த ஊர்களைகொண்டு வருவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களை சேலம் கோட்டத்தின்கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கேரளாவில் எதிர்ப்புகிளம்பியது.
பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள கோவை, ஈரோடு ஆகிய ஊர்கள் பெரும்வருவாயை ஈட்டும் நிலையங்கள். இவற்றை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்தால்பாலக்காடு கோட்டத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என கேரளாவில் உள்ளபல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் சேலம் கோட்டத்தைத் தொடங்குவதில் பெரும் தாமதம் நிலவி வந்தது.தற்போது இதுதொடர்பாக திட்டவட்டமான முடிவுக்கு ரயில்வே வந்து விட்டது.
சேலம் கோட்டத்தின் கீழ் வரும் ஊர்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர்தாமஸ் வர்கீஸ் கூறுகையில், ஜோலார்பேட்டை முதல் கோவை வரையிலான தமிழகபகுதிகள் அனைத்தும் சேலம் கோட்டத்தின் கீழ் வரும்.
மீதமுள்ள பகுதிகளுடன் பாலக்காடு கோட்டம் தொடர்ந்து செயல்படும் என்றார்வர்கீஸ். இதன் மூலம் சேலம் கோட்டத்தின் கீழ் வரும் ஊர்கள் குறித்த சர்ச்சைக்குமுடிவு ஏற்பட்டுள்ளது.
விரைவில் புதிய கோட்டம் உதயமாவதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications