கோடை முடிந்தும் கொந்தளிக்கும் சூரியன்!
சென்னை:
கோடை காலம் முடிந்தும் கூட தமிழகத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் மக்கள்கடும் எரிச்சலில் மூழ்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து விட்டது. தென் மேற்குப் பருவ மழைதென்கோடி தமிழகத்திலும், மேற்குப் பகுதி மாவட்டங்களிலும் சூடு பிடித்துள்ளது.இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது.
இருப்பினும் தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்இன்னும் கடும் வெயில் அடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த காற்று வீசி வந்தது.இருப்பினும் வெயில் குறைந்தபாடில்லை.
குறிப்பாக சென்னை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில்நிலவி வருகிறது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்று வீசி வந்தது. ஆயினும்தரைக்காற்றே பெரும்பாலும் வீசுவதால் வெயில் கடுமையாக உள்ளது.
சராசரியாக கடந்த ஒரு வாரத்தில் 103 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெயில் 104 டிகிரியாக இருந்தது. இன்றும் தொடர்ந்துவெயில் சாத்திக் கொண்டுள்ளது.
மதுரையிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டித்தான் உள்ளது. இதே நிலைதான்,வேலூர், சேலம் போன்ற நகரங்களிலும். கோடை காலம் முடிந்தும் கூட வெயில் இந்தஅளவுக்கு இருப்பது குறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சிநிலையத்தில் கேட்டபோது, இப்போது தரைக்காற்று வீசுகிறது.
இதனால்தான் வெயில் அதிகமாக உள்ளது. கடல் காற்று இரவுக்கு மேல்தான் வீசுகிறது.வரும் நாட்களில் நிலக்காற்று குறைந்து, கடல் காற்று அதிகமாக வீசத் தொடங்கினால்இந்த நிலை மாறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் இரண்டாவது கோடைகாலம் என்று குறிப்பிடும் அளவுக்கு வெயில்கொளுத்தி எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications